Wednesday, March 19, 2008

விஸ்டா SP-1

மைக்ரோசாப்ட் நிறுவனம் இன்று விஸ்டா இயக்குதளத்திற்கான முதல் சர்விஸ் பேக்-கை வெளியிட்டுள்ளது.
பதிவிறக்கம் செய்ய
http://www.microsoft.com/downloads/details.aspx?FamilyID=b0c7136d-5ebb-413b-89c9-cb3d06d12674&displaylang=en

Wednesday, March 12, 2008

அன்றும் இன்றும்-1

தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியைத்தான் இங்கு பார்க்கமுடிகிறது.

ஆம் 20 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தப்பட்ட 1 GB ஹார்ட் டிரைவும் இப்போது உள்ள 1 GB மெமரி கார்டும்..





Tuesday, March 11, 2008

மைக்ரோபிராசசர் (நுண்செயலி)


மைக்ரோபிராசசர் (நுண்செயலி)
நம்மிடம் உள்ள கணினியைப்பற்றி பிறரிடம் சொல்லும்போது எப்படி சொல்வோம்.என்னிடம் பெண்டியம் 3 ,பெண்டியம் 4 அல்லது செலிரான் கணினி உள்ளது என்று சொல்வோம்.இதிலிருந்து என்ன தெரிகிறது?ஒரு கணினி பெரும்பாலும் அதன் நுண்செயலியை மையமாக வைத்தே கூறப்படுகிறது.

இதை கணினியின் "மூளை" என்றழைக்கப்படுகிறது.நுண்செயலி என்பது ஒரே சில்லுக்குள் உள்ள கட்டுப்பாட்டு இயக்கமையமாகும்(CPU).ஒரு கணினியின் கட்டமைப்பு இதனை பொறுத்தே மாறுபடுகிறது.

கனினியில் உள்ள ஒவ்வொரு வன்பொருளும் சிறந்த முறையில் இயங்க கட்டளை சிக்னலை ஏற்படுத்திக் கட்டுப்படுத்துகிறது.நம் கணினியில் கொடுக்கப்படும் செயல்கள் பல நுண்செயல்களாக உடைக்கப்பட்டு இயக்கப்படுவதால் இதை நுண்செயலி என்று கூறுகிறோம்.

நுண்செயலி எவ்வாறு வடிவமைக்கபடுகிறது
சென்ற நூற்றாண்டின் மிக முக்கியமான கண்டுபிடிப்புகளில் கணினியின் நுண்செயலியும் ஒன்று.இதனால் இன்று மாபெரும் மிண்ணணு புரட்சி ஏற்பட்டுள்ளது.இன்று உலகத்தையே ஒரு கணினிக்குள் சுருக்கிவிட்டோம்.

நுண்செயலியை வடிவமைக்கப் பயன்படும் உலோகம் க்வார்ட்ஸ் என்னும் கண்ணாடி ஸ்படிகம் ஆகும்.
இதை நன்றாக சுத்தம் செய்து க்வார்ட்ஸ் சிலிக்கானாக மாற்றுகின்றனர்.
அதன் பிறகு மெல்லிய சிலிக்கன் தகட்டில் இணைப்புகள் வரையப்படுகிறது.
முதன் முதலில் வடிவமைக்கப்பட்ட 4004 நுண்செயலியில் 2300 டிரான்சிஸ்டர்களை வரைந்தனர்.ஆனால் இப்போது பெண்டியம் 4 நுண்செயலியில் 5.5 கோடிக்கும் அதிகமான டிரான்சிஸ்டர்களை வரைந்துள்ளனர்.இவ்வளவு டிரான்சிஸ்டர்களையும் கால் அங்குல சதுர சிலிக்கன் தகட்டில் வரைந்துள்ளனர்.இதை வடிவமைப்பது அவ்வளவு சுலபமல்ல
டிரான்சிஸ்டரை வரைகின்றனர் என்றவுடன் முழு என்று என்ன வேண்டாம்.சிலிக்கனின் மேல் ஃபோட்டோ ரெசிஸ்ட் மூலம் மின்கடத்தும் பொருள்,மின்கடத்தாப்பொருள் மற்றும் குறைகடத்தி ஆகியவற்றைச் சேர்த்து வடிவமைக்கின்றனர்.இது ஒரு டிரான்சிஸ்டர் போல் வேளை செய்வதால் இதை டிரான்சிஸ்டர் டிரான்சிஸ்டர் என்கிறோம்.இவ்வாறு சில்லில் மிக சிக்கலான இணைப்புகளை வரையும் முறையை "ஃபோட்டோ லித்தோகிராபி" முறை என்கிறோம்.வரையப்பட்ட இணைப்புகளில் மெல்லிய கோடுகளின் அகலம் "மைக்ரான்" என்னும் அலகால் அளக்கப்படுகிறது.

ஒரு மைக்ரான் என்பது ஒரு மீட்டரில் 10 லட்சத்தில் ஒரு பாகம் இன்னும் எளிதாக சொல்ல வேண்டுமெனில் நமது தலைமுடியின் தடிமனில் எழுபதில் ஒரு பாகம்.

நுண்செயலியை கண்டுபிடித்தவர்
1969-ல் Busicom என்ற ஜப்பானிய நிறுவனம் கால்குலேட்டருக்குத் தேவையான சர்க்யூட் உருவாக்கிதர இண்டெல் நிறுவனத்தை நாடியது.

இண்டெல் நிறுவனம் அதற்கான முயற்சியில் ஈடுபட்டது.அப்போது இண்டெல் நிறுவன பொறியாளர் மெர்சியன் டெட் ஹாஃப்(Mercian E.Ted haff) கால்குலேட்டருக்குத் தேவையான பல சர்க்யூட்களை ஒரே சில்லுக்குள் வடிவமைத்து உலகின் முதல் நுண்செயலியை வடிவமைத்தார்.

நுண்செயலிகளில் பலவகைகள்
1. X86 வகை நுண்செயலிகள்
2. 64 bit வகை நுண்செயலிகள்
3. RISC வகை நுண்செயலிகள்

லினக்சில் பூட்லோடரை மாற்றுதல்

GRUB லிருந்து LILO மாற்ற
எனக்கு GRUB வேண்டாம் LILO பூட் லோடரே வேண்டும் என்றால் கீழ்கண்ட கட்டளையை தட்டச்சு செய்யவும்

# cp /etc/lilo.conf.anaconda /etc/lilo.conf
# lilo -v
# lilo -t


லைலோ ஏற்கனவே கணினியில் நிறுவப்படவில்லையென்றால் அதற்கான மென்பொருளை இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளவும்

LILO லிருந்து GRUB மாற்ற

# grub-install /dev/hda

என்ற கட்டளையை தட்டச்சு செய்து இயக்கவும்.இதில் /dev/hda என்பதில் உங்கள் கணினியில் என்ன ஹார்ட்டிரைவ் உள்ளதோ அதற்கான அடைவு பாதையை கொடுக்கவும்.ஒருவேளை மென்பொருள் உங்கள் கனினியில் இல்லையென்றால் என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.