Friday, October 24, 2008

ஒரே கணினியில் லினக்ஸ் மற்றும் விண்டோஸ்XP -யை நிறுவுவது எப்படி?






எனது கணினி 1 ஜி.பி ராம் மற்றும் 60 ஜி.பி. நிலைவட்டை கொண்டது. இதில் எவ்வாறு விண்டோஸ் XP யையும் லினக்சையும் நிறுவுவது என்று இப்போது பார்ப்போம்..
முதலில் விண்டோஸ்XP மென்பொருள் சி.டி யை வைத்து உங்கள் கணினியில் விண்டோஸ்XP -யை நிறுவிக்கொள்ளவும்
60 ஜி.பி. நிலைவட்டில் 10 ஜி.பி இடத்தை விண்டோஸ் XP-க்கு ஒதுக்கிவிட்டு மீதம் உள்ள இடத்தில் பிறகு லினக்சை நிறுவுவதற்காக பார்டிசியன் செய்யாமல் விட்டுவிட்டேன்.
விண்டோஸ் XP -யை முழுவதும் நிறுவியபிறகு உங்கள் கணினியை ரீபூட் செய்யவும்.
இப்போது பெடோரா லினக்ஸ் சி.டி-யை வைத்து அதே கணினியை பூட் செய்யவேண்டும்.
லினக்ஸ் நிறுவுவது எவ்வாறு என்று ஏற்கனவே பார்த்துள்ளோம்.
எனவே நிறுவலின் போது வரும் நிலைவட்டு பகிர்தல் திரைக்கு வருவோம்...இங்கு மீதம் உள்ள 50 ஜி.பி இடத்தில் /boot பார்டிசியன்-க்கு 100 எம்.பி,swap பார்டிசியன்-க்கு 2 ஜி.பி, / ரூட் பார்டிசியன்-க்கு 20 ஜி.பி மற்றும் /home பார்டிசியன்-க்கு 25 ஜி.பி என பார்டிசியன்-களை உருவாக்கியுள்ளேன்.


இப்போது பூட் லோடர் கான்பிகுரேசன் திரை வரும்.இதில்தான் சில முக்கியமான செயல்களை செய்யவேண்டும்.ஏனென்றால் விண்டோஸ் XP பூட் லோடரால் பெடோரா லினக்ஸ்-ஐ உணர முடியாது. ஆனால் பெடோரா லினக்ஸ் பூட் லோடரால் -ஆல் விண்டோஸ் XP -யை உணர முடியும்.எனவே GRUB boot loader will be installed on என்பதை தேர்வு செய்துவிட்டு கட்டத்தில் உள்ள fedor core என்பதை தேர்வு செய்யவேண்டும்.
Next அழுத்தி பிறகு வரும் திரைகளில் தேவையான தகவலை கொடுத்து லினக்ஸ் நிறுவலை முடிக்கவும்.
கணினி ரீபூட் ஆனவுடன் இப்போது நமக்கு தெரிவது பூட் லோடர் திரையாகும்.
இங்கு Fedora Core என்பதை தேர்வு செய்தால் பெடோரா லினக்ஸ் பூட் ஆகும்.
WinXp அல்லது Other என்பதை தேர்வு செய்தால் விண்டோஸ் பூட் ஆகும்.


Tuesday, October 7, 2008

தமிழக அரசின் ஆன்லைன் நிலப்பட்டா இணையதளம்.

உங்களது வீடு,மனை போன்றவற்றின் விவரங்கள் (மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதி தவிர) அனத்தும் அந்தந்த மாவட்டம்,வட்டம்,கிராமம் வாரியாக கணினியில் பதியப்பட்டு தேவைப்படும் விவரங்களை இணையதளம் மூலமாக பெற்றுக்கொள்ள,தமிழக அரசின் ஆன்லைன் நிலப்பட்டா இணையதளத்தை தொடங்கியுள்ளது.
அரசு நிலம்,காலியிடம்,அரசுப் பதிவேடு,பட்டா,சிட்ட அடங்கள் விவரங்களை இந்த இணைய தளம் மூலம் சரிபார்த்துக்கொள்ளளாம்.இவ்வசதியினை தமிழக அரசுடன் தேசிய தகவல் இயலியல் மையமும் இணைந்து வெற்றிகரமாக செயல்படுத்தி வருகின்றனர்.

http://eservices.tn.gov.in/

500 ஜிபி ப்ளுரே டிவிடி




ஜப்பானின் பயனியர் நிறுவனம் 500ஜிபி கொள்ளளவு கொண்ட வட்டை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது.இது இன்னும் இரண்டு ஆண்டுகளிலோ அதற்கு முன்போ சந்தைக்கு வரலாம்.
அகச்சிவப்பு லேசர் கதிர்களுக்கு பதில் இந்த வட்டில் நீல நிற லேசர் கதிரை பயன்படுத்துவதால் இந்த பெயர் இதற்கு வந்தது.
ப்ளூரே வட்டுகள் 25 ஜிபி மற்றும் 50 ஜிபி கொள்ளளவில் கிடைக்கும்.இதில் இரண்டு அடுக்கில் எழுத்தக்கூடிய வட்டுகள் 50 ஜிபி கொள்ளளவு கொண்டவை.

ஜிமெயில் பயனாளர்களுக்கான செய்தி:


ஜிமெயில் பயனாளர்களுக்கான செய்தி:
ஜிமெயில் தனது பயனாளர்களுக்காக ஒரு புதிய பாதுகாப்பு முறையை ஏற்படுத்தியுள்ளது.
நீங்கள் உங்கள் அலுவலகத்திலோ அல்லது வெளியில் ப்ரௌசிங் செண்டரிலோ ஜிமெயில் பார்த்துவிட்டு லாக்-அவுட் செய்யாமல் வந்துவிட்டால் உடனடியாக வேறு கணினி மூலமாக லாகின் செய்து அந்த கணினியில் உள்ள உங்கள் ஜிமெயில் இணைப்பை துண்டிக்க முடியும்.
அல்லது உங்கள் ஜிமெயிலை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா என்றும் அறிந்து கொள்ளலாம்.
http://googlesystem.blogspot.com/2008/07/find-who-has-access-to-your-gmail.html

தமிழில் ஜிமெயிலை தமிழில் காண
உங்கள் ஜிமெயில் திரையில் மேல் பகுதியில் setting என்ற பகுதிக்கு சென்று ,அதில் Gmail display Language -ல் Tamil- தேர்வு செய்தால் உங்கள் ஜிமெயில் திரை இப்போது தமிழில் தெரியும்.