Showing posts with label வன்பொருள். Show all posts
Showing posts with label வன்பொருள். Show all posts

Monday, January 5, 2009

கணினி பாகங்களின் வேகத்தை அளக்கும் முறை:

கணினியின் பாகங்கள் பெரும்பாலும் டிஜிட்டல் சர்க்யூட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது.இவைகள் இயங்கக் கடிகாரத் துடிப்பு மிக அவசியம் ஆகும்.ஒரு விநாடியில் எத்தனை கடிகாரத் துடிப்புகளில் வேலை செய்கிறது என்பதைப் பொறுத்து வேகம் அதன் வேகம் கணக்கிடப்படுகிறது.
(எ.கா):நமது உடலின் இதயதுடிப்பைச் சொல்லலாம்.ஒவ்வொரு இதயத்துடிப்பின் போதும் இரத்த ஓட்டம் உடலில் பல பகுதிக்குச் செல்கிறது. அதுமட்டுமல்லாமல் பல செல்கள் புதியதாக உருவாகிறது,பல செல்கள் இறக்கிறது.நமது இதயதுடிப்பின் வேகம் சராசரி வேகத்தை விட குறைந்தாலும் கூடினாலும் ஆபத்து.நமது இதயதுடிப்பு வேகம் நிமிடத்திற்கு இத்தனை துடிப்பு என்று அளக்கப்படுகிறது.அதேபோல் கணினியில் வினாடிக்கு இத்தனை கடிகாரத் துடிப்பு என்று அளக்கப்படுகிறது.இந்த கடிகாரத் துடிப்பை ஏற்படுத்துவது கிரிஸ்டல் ஆசிலேட்டர் எனப்படும் ஒரு சிறிய பொருள்.
இந்தக் கடிகார துடிப்பில் இரண்டு பகுதி உண்டு.ஹை(High) அல்லது 1 மற்றது லோ(Low) அல்லது 0.
ஒரு ஹை பகுதியும் ஒரு லோ பகுதியும் சேர்ந்தது ஒரு சுழற்சி(Cycle) ஆகும்.இந்த ஒரு சுழற்சியை முடிக்க எடுத்துக்கொள்ளும் நேரத்தை "சுழற்சி நேரம்"(Cycle time) என்பர்.ஒரு வினாடிக்கு எத்தனை சுழற்சிகள் நடைபெறுகிறதோ அதைத்தான் "சுழற்சி வேகம்" என்பர்.இந்த வேகம் "ஹெர்ட்ஸ்"(hertz) என்ற அலகால் அளக்கப்படுகிறது.(எ.கா) ஒரு வினாடிக்கு ஐந்து சுழற்சிகள் நடைபெற்றால் அதன் வேகம் 5Hz ஆகும்.
1Hz=வினாடிக்கு ஒரு சுழற்சி.
1000 Hz = 1 கிலோ ஹெர்ஸ் (KHz)
1000 KHz = 1மெகா ஹெர்ஸ் (MHz)
1000 MHz = 1 ஜிகா ஹெர்ஸ் (GHz)
1000 GHz = 1 டெரா ஹெர்ஸ் (THz)
ஒரு நுண்செயலி 100 மெகா ஹெர்ஸ் வேகத்தில் செயல்படுகிறதென்றால் அது ஒரு கோடி சுழற்சிகளை ஒரு வினாடியில் முடிக்கிறது என்று அர்த்தம்.ஒரு கோடி சுழ்ற்சிக்கு ஒரு விநாடி என்றால் ஒரு சுழற்சியை முடிக்க எவ்வளவு நேரம் ஆகும்?..மிக..மிக...மிக குறைந்த நேரமே ஆகும்.இதை வினாடியில் கூற வேண்டுமெனில் கீழ் கண்டவாறு கூறலாம்.
மைக்ரோ விநாடி = 1/100,000 விநாடி (விநாடியில் பத்துலட்சத்தில் ஒரு பகுதி)
நேனோ விநாடி=1/100,00,000 விநாடி
பிகோ விநாடி = 1/100,00,00,000 விநாடி
ஃபெம்டோ விநாடி= 1/100,00,00,00,00,000 விநாடி

Monday, December 22, 2008

கணினி பிழைச்செய்தியும் அதற்கான தீர்வுகளும்...


1.பிழைச்செய்தி:No Fixed Disk present:
காரணம்:ஹார்ட்ரைவ் சரியாக இணைக்கவில்லை என்றால் இவ்வாறு பிழைச்செய்தி வரும்.ஹார்ட்ரைவின் மின் இணைப்பானை சரிபார்க்கவும்.அனைத்து கேபிளிலும் சரியான மின்னழுத்தம் உள்ளதா என்று சரிபார்க்கவும்.பிறகு இணைப்பு கேபிளை சரியாக இணைக்கவும்.

2.Error Reading Drive C"
ஹார்ட்ரைவின் இணைப்புகள் சரியாகவுள்ளதா என்று சரிபார்க்கவும்.இணைப்புக் கேபிளில் பழுதிருந்தால் அதை மாற்றிடவும்.மீண்டும் பிழை செய்திவந்தால் ஆண்டிவைரஸ் நிரலை பயன்படுத்தி வைரஸ் இருந்தால் அதை நீக்கிவிடவும்.பிறகும் பிழை செய்தி வந்தால் "Scan disk" -ஐ இயக்கி செக்டார்கள் ஏதும் பழுதாகியுள்ளதா என்று பார்க்கவும்.செக்டார்கள் பழுதாகி இருந்தால் ஹார்ட்ரைவை மாற்றவும்.

3.Track 0 not Found
டிரைவின் ட்ராக் "0" கெட்டிருந்தால் இவ்வாறு பிழைச்செய்தி வரும். டிரைவின் கோப்பு விவர அட்டவணை(FAT) இங்கு தான் பதிந்திருக்கும்.இந்த அட்டவணையைக் கொண்டுதான் டிரைவில் பதிந்திருக்கும் அனைத்துத் தகவலையும் எழுத/படிக்க முடியும்.பூட் பிளாப்பியை பயன்படுத்தி
ஹார்ட்டிரைவை பார்ட்டீசியன் பன்னவும்.மீண்டும் இதே பிழை செய்தி வந்தால் ஹார்ட்டிரைவை மாற்றவும்.

4.கணினியை "ஆன்" செய்தும் திரையில் டிஸ்பிளே வரவில்லை.
1.மானிட்டரின் மின் கேபிள் சரியாக இணைக்கப்பட்டுள்ளதா என்று சரிபார்க்கவும்.
2.மானிட்டரின் பொத்தான் "ஆன்" ஆகியுள்ளதா என்று பார்க்கவும்.
3.மானிட்டரின் இணைப்பு கேபிளை(interface cable) சரிபார்க்கவும்.
4.மானிட்டரின் Brightness control-ஐச் சரிபார்க்கவும்.
5.வி.ஜி.ஏ கார்டைச் சரிபார்க்கவும்.
6.நினைவகத்தை சரிபார்க்கவும்.

5.கணினியை "ஆன்" செய்தவுடன் ஒரு பெரிய பீப் ஒலி மற்றும் இரண்டு சிறிய பீப் ஒலி வந்து டிஸ்பிளே வரவில்லை என்றால்:
1.வி.ஜி.ஏ(VGA) கார்டைச் சரிபார்க்கவும்.
2.வேறு வி.ஜி.ஏ கார்டை மாற்றவும்.

6.கணினியை "ஆன்" செய்தவுடன் "No keyboard is connected " அல்லது "Keyboard not present" என்ற பிழைச் செய்தி வருகிறது.
1.விசைப்பலகை சரியாக இணைக்கப்பட்டுள்ளதா என்று சரிபார்க்கவும்.
2.விசைப்பலகையின் கேபிளை சரிபார்க்கவும்.எங்கேனும் துண்டிக்கப்பட்டுள்ளதா என்று பார்க்கவும்.
3.நன்றாக இயங்கும் வேறு ஒரு விசைப்பலகையை இணைக்கவும்.அதன்பிறகும் பிழை செய்தி வந்தால் மதர்போர்டின் விசைப்பலகை இணைப்பானில் பிரச்சனை இருக்கலாம்.

7.DVD -ல் உள்ள தட்டை(tray) பகுதி வெளிவரவில்லை
1.DVD மூலம் ஏதேனும் படங்களை இயக்கி கொண்டிருக்கும் போது வெளிவராது.எனவே DVD மூலம் திறந்திருக்கும் மென்பொருள்களை மூடி விட்டு முயற்சிக்கவும்.இல்லையென்றால் கனினியை ரீஸ்டார்ட் செய்தபின் முயற்சிக்கவும்.
2.DVD டிரைவின் மின் இணைப்பியை சரிபார்க்கவும்.அப்படியும் திறக்கவில்லையா டிவிடி தட்டை இயக்கும் மோட்டார் பழுந்தடைந்திருக்கலாம்.
3.டிவிடி டிரைவின் முன் புறம் உள்ள சிறுதுளையில் நீண்ட மெல்லிய கம்பியை நுழைத்தால் டிவிடி தட்டைப் பகுதி வெளியே வரும்.

8.கணினியை "ஆன்" செய்தவுடன் தொடர்ச்சியாக பீப் ஒலி வந்து டிஸ்பிளே வரவில்லை என்றால்..
1.நினைவகத்தை (RAM) சரியாக இணைக்கவும்
2.நினைவகத்தை மாற்றவும்.

9.Bad command are file name..
நீங்கள் கொடுத்த டாஸ்(DOS) கட்டளை சரியான கட்டளைதானா என்று சரிபார்க்கவும்.கட்டளையில் ஏதேனும் சிறு தவறு நேர்ந்திருந்தாலும் இவ்வாறு பிழை செய்தி வரும்.

10.Insufficient Disk Space
டிஸ்க்-ல் தகவலை பதிக்க போதிய இடம் இல்லையெனில் இவ்வாறு பிழைச்செய்தி வரும்.தேவையில்லாத கோப்புகளை அழித்துவிட்டால் இடம் கிடைக்கும்.


Friday, December 19, 2008

மின்சப்ளை பகுதி(SMPS)


மின்சப்ளை பகுதி
கணினியின் அனைத்து வன்பொருள்களுக்கு தேவையான மின்த்தேவையை தரக்கூடியது இந்த SMPS. கணினி ஒரு மின்னணு சாதனம் என்பதால் அது நேர்மின்னழுத்தத்தில் மட்டுமே இயங்கும்.அதனால் தான் நாம் இந்த SMPS -ஐ பயன்படுத்துகிறோம்.இது மாறுதிசை(AC) மின்னோட்டத்தை நேர்திசை(DC) மின்னோட்டமாக மாற்றுகிறது.
SMPS-லிருந்து வரும் நேர்மின்னழுத்தம்(DC) மதர்போர்டின் மின் இணைப்பான் மூலமாக மதர்போர்டின் அனைத்து பாகங்களுக்கும் செல்கிறது.
இந்த மின் இணைப்பான் இருவகைப்படும்.
1.AT வகை மின் இணைப்பான்
2.ATX வகை மின் இணைப்பான்
AT வகை மின் இணைப்பான்
இது இரண்டு 6 பின்களைக் கொண்ட மின் இணைப்பான்.இதில் +5v, +12v, Ground, -12v,-5v எனப் பலவகையான நேர்மின்னழுத்தம் பயன்படுத்தப்படுகிறது.இப்போது வரும் மதர்போர்டில் இது பயன்படுத்தப்படுவதில்லை.
ATX வகை மின் இணைப்பான்
இதில் பல வண்ண ஒயர்கள் பயன்படுத்தப்படுகிறது.ஒவ்வொரு வண்ணமும் அது கடத்தும் மின்னழுத்தத்தை குறிக்கிறது.இப்போது வரும் மதர்போர்டில் இந்த வகை இணைப்பான்களே பயன்படுத்தப்படுகிறது.







Friday, July 11, 2008

மாதர்போர்ட் என்றால் என்ன?

மதர்போர்ட்
இது கணினியின் அனைத்து வன்பொருள்களும் சங்கமிக்கும் ஒரு பெரிய சர்க்யூட் பலகையாகும்.இதை ஆங்கிலத்தில் Printed Circuit Board (PCB ) என்பர்.ஏனென்றால் சர்க்யூட்கள் அனைத்தும் பலகையிலே அச்சடிக்கப்படுவதால் இது பிரின்டட் சர்க்யூட் போர்ட் என்று அழைக்கப்படுகிறது.



மின் இணைப்பான்:
மின்சப்ளை பகுதியிலிருந்து(SMPS) வரும் மின்சாரத்தை மதர்போர்டுக்குக் கொடுக்கு உதவுகிறது.
பிராஸசர் இணைப்பான்:

பிராஸசரை மதர்போர்டுடன் இணைக்கப்பயன்படுகிறது.
சில்லுத்தொகுப்பு:

பலவகை கட்டுப்பாட்டு சர்க்யூட்கள் உள்ளிணைக்கப்பட்ட ஒரு சில்லு ஆகும்.இதை மையமாக வைத்தே மதர்போர்ட் வடிவமக்கப்படுகிறது.
நினைவக இணைப்பான்: ராம் நினைவகத்தை மதர்போர்டுடன் இணைக்கப்பயன்படுகிறது.இது சிம்(SIMM),டிம்(DIMM),ரிம்(RIMM) எனப் பலவகைப்படும்.
பயாஸ் ரோம்(BIOS):இது கணினியின் அடிப்படை செயல்களுக்கான மென்பொருளை கொண்டிருக்கும் அழியா நினைவகம் ஆகும்.
சீமாஸ் மின்கலம்(CMOS Battery):

ஒரு ரூபாய் நாணயம் அளவு சிறிய மின்கலம் மதர்போர்டில் இருக்கும்.நமது வன்பொருள்களை பற்றிய தகவல்களை சேமித்துவைத்திற்கும் நினைவகத்திற்கு தொடர்ந்து மின்சப்ளை கொடுப்பதற்காக உள்ளது.