Monday, August 18, 2008

லினக்ஸ் வழங்கல்கள் (Linux Distribution)

லினக்ஸின் கருவை அடிப்படையாக கொண்டு மக்களின் எளிய பயன்பாட்டிற்காக வெளியிடப்படும் இயங்குதளங்கள் அனைத்தும் லினக்ஸ் வழங்கல்கள் என்று அழைக்கப்படுகிறது.
ஏற்கனவே சொன்னது போல் லினக்ஸ் ஒரு கட்டற்ற மென்பொருளாகும். இதனால் உலகெங்கும் இருக்கும் லட்சகணக்கான நிரலாளர்கள் பல்வேறு பயன்பாட்டிற்காக பலவிதமான மென்பொருள்களை வடிவமைத்து லினக்சை மேலும் மேலும் மெருகேற்றுகின்றனர்.
தொடக்க காலத்தில் ஒருவர் லினக்சை பயன்படுத்த வேண்டுமென்றால், யூனிக்ஸ் தொடர்பான சிறப்பு பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.இன்னும் சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் ஒரு சிறிய மென்பொருளை நிறுவுவதற்கு, அதற்கு தேவையான கோப்புகளை எங்கே விப்பது,எத்தனை கட்டளைகளை இயக்க வேண்டும், இதற்கான நிரலை எங்கிருந்து இயக்கவேண்டும் போன்றவற்றை அறிந்திருக்க வேண்டும்.
இதனால் லினக்ஸ் பொதுமக்களின் பயன்பாட்டிலிருந்து சற்று விலகியே இருந்தது.
இலவசமாக கிடைக்கும் இந்த லினக்சை சாதரன மக்களும் எப்படி நிறுவுவது,பயன்படுத்துவது என்று எண்ணிய போதுதான் இந்த வழங்கல்கள் என்ற எண்ணக்கரு உருவானது என்று சொல்லலாம்.

தொடக்ககாலத்தில் உருவான வழங்கல்கள்:
MCC Interim Linux-இது 1992 ஆம் ஆண்டு மான்செஸ்டர் பல்கலை கழகத்தால் வெளியிடப்பட்டது.
1992-ல் SLS (Soft Landing Linux System) என்ற வழங்கலை A&M பல்கலை கழகத்தை சேர்ந்த ஒருவரால் வெளியிடப்பட்டது மேற்கண்ட எந்த வழங்கல்களும் சரியாக பராமரிக்கப்படாத்தால் பாதியிலே கைவிடப்பட்டது.
ஆனால் திரு.பேட்ரிக் வால்கர்டிங்(Patric Volkerding) என்பவர் SLS–யை அடிப்படையாகக் கொண்டு ஸ்லாக்வேர் என்ற வழங்கலை உருவாக்கினார்.இதுவே இன்றுவரை தொடர்ந்து வரும் மூத்த லினக்ஸ் ஆகும்.
தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட லினக்ஸ் வழங்கல்கள் உலகெங்கும் கிடைக்கின்றன.இதைப்பற்றி மேலும் தகவல்கள் அறிய கீழ்கண்ட இணையதளத்தை பார்வையிடவும்.
http://www.linux.org/dist
இப்போது பலராலும் பய்ன்படுத்தப்படும் லினக்ஸ் வழங்கல்களில் சில

பெஃடோரா (Fedora)
ரெட் ஹாட் (RedHat)
சுசே (Suse)
மாண்ட்ரிவா (Mandriva)
டெபியன் (Debian Linux)
உபுண்டு (Ubendu Linux)
நாப்பிக்ஸ் (Knoppix)
மற்றும் பல ...

டெபியன் லினக்ஸ்:
இது டெபியன் ப்ராஜெக்ட் என்ற அமைப்பு மூலம் வெளியிடப் படுகிறது.இது 1993 –ம் ஆண்டு திரு.இயன்மர்டாக்(Ian Murdock) என்பவரால் முதலில் தொடங்கப்பட்டது.
DEBIAN என்பதில் DEB என்பது அவரது மனைவி பெயரான Debra என்பதிலிருந்தும் IAN என்பது அவரது பெயரிலிருந்தும் எடுத்த சொல்லாகும்.
இது முழுதும் இலவசமாக கிடைக்ககூடிய இயங்குதளமாகும்.
இதில் நிறுவப்படும் மென்பொருள்கள் dpkg என்ற மாதிரியில் இருக்கும்.dpkg என்றால் Debian Package என்பதன் சுருக்கம் ஆகும்.இதற்கு உலகெங்கும் லட்சக்கணக்கான பயனாளர்கள் உள்ளனர்.இதில் இன்னொரு வியப்பான செய்தி என்னவென்றால் இந்த டெபியன் லினக்சிற்கு 15,000 க்கும் அதிகமான இலவச மென்பொருள்கள் கிடைக்கின்றன.டெபியன் லினக்சை பதிவிறக்கம் செய்ய என்ற இணைய தளத்திற்கு செல்லவும்.

உபுண்டு லினக்ஸ்
இது டெபியன் லினக்சை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இயங்குதளம்.இதில் பயன்படுத்தப்படும் எல்லா மென்பொருள்களும் க்னூ-வின் கட்டற்ற மென்பொருள் ஆகும்.இதன் புதிய பதிப்பு ஒவ்வொரு ஆறுமாதத்திற்கு ஒருமுறை வெளியிடப்படுகிறது.இதன் இன்னொரு சிறப்பு என்னவென்றால் உபுண்டு பதியப்பட்ட குறுவட்டுகளை (சி.டி) தபால் மூலம் பெறுவதற்கு நாம் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.இதற்கு திரு.மார்க் ஷட்டில்வர்த்(Mark Shuttle Worth) என்பவருடைய கனோனிகல்(Cononical Ltd) நிறுவனம் உதவுகிறது.இவை மேல்மேசை மெற்றும் மட்க்கணினிகளுக்கு சிறப்பான் ஆதரவை வழங்குகின்றது.
உபுண்டு என்ற ஆப்பிரிக்க சொல்லுக்கான் பொருள் மானுட நேயம் ஆகும்.உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது தாய்மொழியில் இலவசமாக கிடைக்க கூடிய இயங்குதளமாக இது அமையும்.
உபுண்டு தவிர கே உபுண்டு,எக்ஸ் உபுண்டு,எடுபுண்டு,கோபுண்டு என பதிப்புகளில் வெளிவருகிறது.உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் லினக்ஸ் வழங்கல் இதுவாகும்.
உபுண்டு லினக்ஸ் சி.டி-யை இலவசமாக பெற...
உபுண்டு லினக்சை நிறுவும் கையேடு-தமிழில்
கேஉபுண்டு லினக்சை நிறுவும் கையேடு-தமிழில்

நாப்பிக்ஸ் லினக்ஸ்
இதுவும் டெபியன் லினக்சை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இயங்குதளம்.இதன் சிறப்பு என்னவென்றால்,இது நேரலை குறுவட்டு (Live CD) லினக்ஸ் ஆகும்.அதாவது உங்கள் கணினியில் நிறுவாமல் தற்காலிகமாக லினக்சை பயன்படுத்தி பார்க்கமுடியும்.மேலும் விளக்கமாக கூற வேண்டுமானில், கணினியின் வன்தட்டில் லினக்சை நிறுவாமல் இந்த குறுந்தகடு மூலம் கணினியை பூட் செய்து தற்காலிகமாக லினக்சை பயன்படுத்திக்கொள்ளலாம்.தேவையில்லை என்றால் குறுந்தகடை எடுத்து நம் வன்தகட்டிலிருந்து பூட் செய்துகொள்ளலாம்.இந்த லினக்சை பதிவிறக்கம் செய்ய http://www.knoppix.org
என்ற இணைய தளத்திற்கு செல்லவும்.

ரெட் ஹாட்/பெஃடோரா லினக்ஸ்:
ரெட் ஹாட் 1998-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.இதன் ஒன்பதாவ்து பதிப்பிற்க்கு பிறகு 2003-ம் ஆண்டு இது இரண்டு பிரிவானது.1. பெஃடோரா லினக்ஸ் 2. ரெட் ஹாட் லினக்ஸ்.
பெஃடோரா(Fedora) குழுமம் லினக்சை வடிவமைத்து வெளியிடுகிறது.இதற்கு ரெட் ஹாட் நிறுவனம் உதவுகிறது.இந்த பெஃடோரா லினக்ஸ் வீடு மற்றும் சிறிய அலுவலக பயன்பாட்டிற்கு இலவசமாக வெளியிடப்படுகிறது.
ரெட் ஹாட் லினக்ஸ் பெஃடோராவை அடிப்படையாக கொண்டு சர்வர் கணினிகளின் பயன்பாட்டிற்காக வெளியிடப்படும் லினக்ஸ் ஆகும்.இதை ரெட் ஹாட் என்டர்ப்ரைஸ் லினக்ஸ் (RedHat Enterprise Linux) என்பர்.இதன் உரிமம் இலவசமாக கிடைக்காது. விலை கொடுத்து வாங்கவேண்டும்.
பெஃடோரா லினக்சை நிறுவும் கையேடு – தமிழில்..

சூசே லினக்ஸ்:
இதுவும் ஒரு புகழ்பெற்ற லினக்ஸ் வழங்கள் ஆகும். SUSE என்பது Software and Systems Entwicklung என்ற ஜெர்மனி சொல்லிலிருந்து வந்தது.இதற்கு தகுந்த ஆங்கில சொல் Software and System Development. இப்போது இந்த சூசே லினக்ஸ் நாவல் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது.ரெட் ஹாட்-ல் உள்ளது போல் மேல்மேசை கணினிகளுக்கு என்று ஒரு இலவச வெளியீடும் பெரிய அலுவலக கணினிகளுக்கு விலை கொடுத்து வாங்ககூடிய வெளியீடுகளும் உள்ளது.சான்றாக சூசே லினக்ஸ் என்டர்ப்ரைஸ்
சூசே கணினிகளின் வன்பொருள் மற்றும் மென்பொருள்களை மேலாண்மை செய்ய Yast என்ற மென்பொருள் கருவி பயன்படுத்தப்படுகிறது.
http://www.novell.com/linux/

மாண்ட்ரிவா லினக்ஸ்
இதன் பழைய பெயர் மாண்ட்ரேக்(Mandrake) ஆகும்.1998-ம் ஆண்டு பிஃரான்சில்(France) ரெட் ஹாட் லினக்சை அடிப்படையாக கொண்டு தொடங்கப்பட்ட லினக்ஸ்.இதிலும் ரெட் ஹாட் போல் மேல்மேசை கணினிகளுக்கு என்று ஒரு இலவச வெளியீடும் பெரிய அலுவலக கணினிகளுக்கு விலை கொடுத்து வாங்ககூடிய வெளியீடுகளும் உள்ளது.இதில் உள்ள (Smart Package Manager) மற்ற லினக்ஸ் வழங்கல்களின் மென்பொருள்களை ஆதரித்து நிறுவும் திறனுடையது.
அதாவது ரெட் ஹாட் என்றால் rpm மாதிரி மென்பொருள்கள், டெபியன் என்றால் dpkg மாதிரி மென்பொருள்கள்,இவை அனைத்தையும் இது ஆதரிக்கும்.அது மட்டுமல்லாமல் Mandriva Control என்ற கருவியின் மூலம் கணினியின் வன்பொருள்/மென்பொருள்களை மேலாண்மை செய்ய முடியும்.

http://www.mandriva.com/

உலகமுழுதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்பலாம் …

ஆச்சர்யமாக இருக்கிறதா...உங்கள் நண்பர்கள் உலகில் எங்கு இருந்தாலும் அவர்களுக்கு இனி இலவசமாக குறுஞ்செய்தியை இணையம் மூலமாக அனுப்பலாம்.
JAXTR என்ற அமெரிக்க நிறுவனம் இணையம் மூலமாக குறுஞ்செய்தியை(SMS) முழுவதும் அனுப்பும் சேவையை தொடங்கியுள்ளது.

http://www.jaxtr.com/user/index.jsp

யார் வேண்டுமானாலும் இந்த இணையதளத்தில் செய்து தங்களுக்கென்று ஒரு கணக்கை இலவசமாக உருவாக்கிகொள்ளலாம்.இதன் மூலம் வெளிநாட்டில் உள்ள உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இலவசமாக SMSஅனுப்பிக்கொள்ளலாம்.
இதன் இன்னொரு சிறப்பு குறுஞ்செய்தியை பெறுபவர்கள் Jaxtr–ல் மெம்பராக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

கீழ்கண்ட இணையதளம் மூலம் இந்தியாவிற்குள் SMS அனுப்பமுடியும்
http://www.way2sms.com
http://www.indyarocks.com

http://www.youmint.com

Thursday, August 14, 2008

வீடு தேடி வரும் ஓப்பன் சொலாரிஸ்

மைக்ரோ சிஸ்டம் x86 கட்டமைப்பு (நாம் வீடுகளில் பயன்படுத்தும் கணினி) கணினிகளுக்கான சொலாரிஸ் இயக்குதள மென்பொருள் சி.டி யை இலவசமாக வழங்கி வருகிறது.
கிழ்கண்ட இணைய தளத்தில் உங்களது இருப்பிட தகவலை கொடுத்தால் எந்தவித கட்டனமும் இன்றி உங்கள் வீட்டிற்கு மென்பொருள் சி.டி யை அனுப்பிவைக்கின்றனர்.
http://www.opensolaris.com/get/index.html
OpenSolaris Free CD Order Form

Wednesday, August 6, 2008

கணினி வன்பொருள்களின் தற்போதைய விலை பட்டியல்

சென்னையில் கணினி சம்பந்தமான மின்னணு சாதனங்கள் வாங்கணும் என்றால் எல்லோரும் உடனே சொல்வது ரிட்சி ஸ்ட்ரீட்.இந்த தெருவை சென்னையின் "எலக்ட்ரானிக் சந்தை" எனலாம்.
நானும் எனது நண்பரும் ஒரு கணினியை ஒருங்கிணைப்பதற்காக தேவையான வன்பொருள்களை வாங்க ரிட்சி ஸ்ட்ரீட் கடந்தவாரம் சென்றோம்.கிழ்கண்ட வன்பொருள்களை வாங்கி புது கணினியை ஒருங்கிணைத்தோம்.
Processor: Pentium 4 core 2 Duo 2.53 GHz
Ram :DDR -2: 2GB
HDD: Seagate 160GB
Motherboard: INTEL DG 31 PR
DVD RW:Samsung
Mouse:USB Optical
Monitor:LCD 17" Samsung (Black)
Cabinet: i-ball
UPS: Wipro
Speaker:Creative
இதன் மொத்த விலை ரூ 26,000 -யை தொட்டது.

கணினி வன்பொருள்களின் (சென்னையில் ) அன்றைய விலை நிலவரத்தை அறிய கிழ்கண்ட இணைய தளம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது .
http://www.novatroncomputers.in/Productslist.aspx

படித்ததில் பிடித்தது

ஐ.டி. (தகவல் தொழில்நுட்ப) துறையில் பணிபுரிபவர்களுக்கான அறிவுரை என்று விகடனில் படித்தேன்.பிடித்திருந்தது அதை இங்கு பதிவு செய்துள்ளேன் உங்களுக்காக

#நீங்கள் கூடுதல் புத்திசாலிகள்- கெட்டிக்காரர்கள். எந்த ஒரு விஷயத்தையும் பளிச்சென்று பிடித்துக் கொள்ளும் கூர்மதி உங்களுடையது. வெற்றி என்பது உங்களுக்கு ஒரு விளையாட்டுப் பொருள். வாழ்க!

#பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல! உங்களின் பெற்றோர் தங்களது பணிக் காலத்தின் இறுதியில் வாங்கும் ஊதியத் தொகையை, நீங்கள் முதல் மாதமே வாங்கி விடலாம். அதற்காக, அவர்களை விடவும் நீங்கள் அதிபுத்திசாலி என்றோ, திறமையாளர் என்றோ, பெரிய மனிதராகவோ எண்ண வேண்டாம்.

#உறவினர்களை அற்ப ஜந்துக்கள் போல நினைக்க வேண்டாம். தம்பி- தங்கைகளைப் படிக்க வைக்க நிறைய செலவு செய்யுங்கள். குடும்பத்தின் பந்த- பாசத்தை, இணைய தளத்தில் டௌன் லோட் செய்ய முடியாது!

#வெளிநாட்டுப் பணம் வரலாம்... வெளிநாட்டுப் பண்பாடு வரலாமா? பிற மனிதர்கள் எல்லோருமே நாம் பயன்படுத்திக் கொள்ள மட்டும் அல்ல!

#பத்து ரூபாய் கூடுதல் சம்பளம் என்றதும் கம்பெனியைக் கைகழுவுவது கொஞ்ச காலம் பெருமையாகத் தெரியலாம். ஆனால், ஒரு நாள்... இந்தத் துறையின் செயல்பாடே இதனால் ஸ்தம்பிக்க வாய்ப்பிருக்கிறது.

#உணவு, உறக்கம், ஓய்வு, காலா காலத்தில் இல்லாதபடி உடம்பை- மனதைச் சீர்குலைத்தால், 40 வயதுக்குப் பிறகு உயிர் வாழ்வதே பிரச்னையாகி விடும். யோசியுங்கள்.

#எப்போதும் ஏ.ஸி-யில் இருப்பதால், உங்களுக்கு வியர்வையே வருவதில்லை. அது, உடலுக்குக் கெடுதல். உடலை வியர்க்க விடுங்கள். தண்ணீர்த் தாகம் எடுக்காத போதும் நீர் அருந்துங்கள். கண்ட கண்ட குளிர்பானங்கள் குடிப்பதை விட்டு விட்டு, எலுமிச்சை, ஆரஞ்சு, ஆப்பிள், திராட்சை சாறு அருந்துங்கள். பார்லியும் சேர்த்துக் கொள்ளுங்கள். கண்களிலும் கவனம் வையுங்கள்.

#உட்கார்ந்தே இருப்பதால் எடை கூடும்; சர்க்கரை அதிகரிக்கும். கொலஸ்ட்ராலும் பழுத்துக் கிடக்கும். மூளைக்கு வேலை என்பதால் ரத்த அழுத்தமும், சக்கைப் போடு போடும். எல்லாவற்றையும் எதிர்பார்த்து வெற்றி கொள்ளுங்கள்.

#காதலிக்கும்போது அல்லது திருமணத்துக்குப் பெண் தேடும் போது... சம்பளம், வேலைவாய்ப்பு, செலவழிக்கும் இயல்பு போன்றவற்றை இரண்டாம்பட்சமாக வைத்துக் கொண்டு, ஒழுக்கம், குணம், பண்பாடான குடும்பம் ஆகிய விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள்.

#'இன்று போலவே என்றும் சம்பளம் வரும்' என்று கனவு காணாதீர்கள். சிக்கனமாக செலவழிக்கப் பழகுங்கள்.

#உங்களால் அதிகம் செலவழிக்க முடியும் என்பதற்காக, சிரமப்பட்டு சம்பாதிப்பவர்களது மனம் புண்படும்படி ஜம்பம் அடிக்காதீர்கள்.

#அந்நிய நாட்டின் தயவில் அதிகம் சம்பாதிப்பவர்களாகிய பலரும் இந்த நாட்டு வெற்றிக்கு உழைப்பவரை இளக்காரமாக நினைக்காதீர்கள்.

#வெளிநாடுகளில் வேலை பார்த்துவிட்டு ஊருக்குத் திரும்பும் போது, ஓட்டல்களில் தங்கிக் கொண்டு... உறவினர்களை- அம்மா- அப்பாவை, ''என்னால் வர முடியாது. இங்கு வந்து பார்... ஆட்டோவுக்கு வேண்டுமானால் காசு தருகிறேன்!'' என்று கூறி அசிங்கப்படுத்தாதீர்கள். பணத்தை விட ரத்தம் கனமானது.

#வெளிநாடுகளில் பிறந்து வளரும் குழந்தைகளுக்கு எதிர்ப்புச் சக்தி குறைவு என்பது உண்மைதான். என்றாலும் சிறிது நேரமாவது தாத்தா- பாட்டி... அதாவது உங்களின் பெற்றோர், உங்கள் பிள்ளையைக் கொஞ்சுவதற்கு- உணவு ஊட்டு வதற்கு அனுமதி கொடுங்கள்.

உங்களை காயப்படுத்துவதாக இந்த பதில் அமைந்தால், என்னை மான்னியுங்கள் உங்களை நோகடிப்பது எனது நோக்கம் அல்ல. இவை யாவும், உங்களைப் போன்றோரின் பெற்றோர்கள், உங்களிடம் சொல்ல முடியாமல் என்னிடம் புலம்பிய புலம்பல்கள். நான் வெறும் தபால்காரன்... அவ்வளவே! நமக்கு வரும் எந்த நோட்டீஸூக்கும் தபால்காரனை நோக முடியாது.