Friday, December 26, 2008

விண்டோஸ் XP-டிப்ஸ் -3

விண்டோஸ் XP-ல் CD/DVD autoplay ஆவதை நிறுத்த
1) Click Start, Run சென்று GPEDIT.MSC தட்டச்சு செய்யவும்
2) வரும் திரையில் Computer Configuration, Administrative Templates, System செல்லவும்
3) வலது புறம் Turn autoplay off டபுள் க்ளிக் செய்து enable செய்யவும்

விண்டோஸ் XP -ல் பூட் பிளாப்பி உருவாக்குவது எப்படி?
புதிய பிளாப்பி டிஸ்க்கை அதன் டிரைவில் நுழைக்கவும்
MY Computer சென்று பிளாப்பி டிஸ்க் icon- ஐ வலது க்ளிக் செய்து format தேர்வு செய்யவும்
வரும் திரையில் format option சென்று Create an MS-DOS startup disk என்பதை தேர்வு செய்யது ok கொடுக்கவும்.
இதற்கு குறைந்தது 5 பிளாப்பி டிஸ்க் தேவைப்படும்.
ஒருவேளை உங்களிடம் கணினியை பூட் செய்ய விண்டோஸ் XP CD இல்லைஎன்றால் இந்த பிளாப்பியை பயன்படுத்தி பூட் செய்யலாம்

Monday, December 22, 2008

கணினி பிழைச்செய்தியும் அதற்கான தீர்வுகளும்...


1.பிழைச்செய்தி:No Fixed Disk present:
காரணம்:ஹார்ட்ரைவ் சரியாக இணைக்கவில்லை என்றால் இவ்வாறு பிழைச்செய்தி வரும்.ஹார்ட்ரைவின் மின் இணைப்பானை சரிபார்க்கவும்.அனைத்து கேபிளிலும் சரியான மின்னழுத்தம் உள்ளதா என்று சரிபார்க்கவும்.பிறகு இணைப்பு கேபிளை சரியாக இணைக்கவும்.

2.Error Reading Drive C"
ஹார்ட்ரைவின் இணைப்புகள் சரியாகவுள்ளதா என்று சரிபார்க்கவும்.இணைப்புக் கேபிளில் பழுதிருந்தால் அதை மாற்றிடவும்.மீண்டும் பிழை செய்திவந்தால் ஆண்டிவைரஸ் நிரலை பயன்படுத்தி வைரஸ் இருந்தால் அதை நீக்கிவிடவும்.பிறகும் பிழை செய்தி வந்தால் "Scan disk" -ஐ இயக்கி செக்டார்கள் ஏதும் பழுதாகியுள்ளதா என்று பார்க்கவும்.செக்டார்கள் பழுதாகி இருந்தால் ஹார்ட்ரைவை மாற்றவும்.

3.Track 0 not Found
டிரைவின் ட்ராக் "0" கெட்டிருந்தால் இவ்வாறு பிழைச்செய்தி வரும். டிரைவின் கோப்பு விவர அட்டவணை(FAT) இங்கு தான் பதிந்திருக்கும்.இந்த அட்டவணையைக் கொண்டுதான் டிரைவில் பதிந்திருக்கும் அனைத்துத் தகவலையும் எழுத/படிக்க முடியும்.பூட் பிளாப்பியை பயன்படுத்தி
ஹார்ட்டிரைவை பார்ட்டீசியன் பன்னவும்.மீண்டும் இதே பிழை செய்தி வந்தால் ஹார்ட்டிரைவை மாற்றவும்.

4.கணினியை "ஆன்" செய்தும் திரையில் டிஸ்பிளே வரவில்லை.
1.மானிட்டரின் மின் கேபிள் சரியாக இணைக்கப்பட்டுள்ளதா என்று சரிபார்க்கவும்.
2.மானிட்டரின் பொத்தான் "ஆன்" ஆகியுள்ளதா என்று பார்க்கவும்.
3.மானிட்டரின் இணைப்பு கேபிளை(interface cable) சரிபார்க்கவும்.
4.மானிட்டரின் Brightness control-ஐச் சரிபார்க்கவும்.
5.வி.ஜி.ஏ கார்டைச் சரிபார்க்கவும்.
6.நினைவகத்தை சரிபார்க்கவும்.

5.கணினியை "ஆன்" செய்தவுடன் ஒரு பெரிய பீப் ஒலி மற்றும் இரண்டு சிறிய பீப் ஒலி வந்து டிஸ்பிளே வரவில்லை என்றால்:
1.வி.ஜி.ஏ(VGA) கார்டைச் சரிபார்க்கவும்.
2.வேறு வி.ஜி.ஏ கார்டை மாற்றவும்.

6.கணினியை "ஆன்" செய்தவுடன் "No keyboard is connected " அல்லது "Keyboard not present" என்ற பிழைச் செய்தி வருகிறது.
1.விசைப்பலகை சரியாக இணைக்கப்பட்டுள்ளதா என்று சரிபார்க்கவும்.
2.விசைப்பலகையின் கேபிளை சரிபார்க்கவும்.எங்கேனும் துண்டிக்கப்பட்டுள்ளதா என்று பார்க்கவும்.
3.நன்றாக இயங்கும் வேறு ஒரு விசைப்பலகையை இணைக்கவும்.அதன்பிறகும் பிழை செய்தி வந்தால் மதர்போர்டின் விசைப்பலகை இணைப்பானில் பிரச்சனை இருக்கலாம்.

7.DVD -ல் உள்ள தட்டை(tray) பகுதி வெளிவரவில்லை
1.DVD மூலம் ஏதேனும் படங்களை இயக்கி கொண்டிருக்கும் போது வெளிவராது.எனவே DVD மூலம் திறந்திருக்கும் மென்பொருள்களை மூடி விட்டு முயற்சிக்கவும்.இல்லையென்றால் கனினியை ரீஸ்டார்ட் செய்தபின் முயற்சிக்கவும்.
2.DVD டிரைவின் மின் இணைப்பியை சரிபார்க்கவும்.அப்படியும் திறக்கவில்லையா டிவிடி தட்டை இயக்கும் மோட்டார் பழுந்தடைந்திருக்கலாம்.
3.டிவிடி டிரைவின் முன் புறம் உள்ள சிறுதுளையில் நீண்ட மெல்லிய கம்பியை நுழைத்தால் டிவிடி தட்டைப் பகுதி வெளியே வரும்.

8.கணினியை "ஆன்" செய்தவுடன் தொடர்ச்சியாக பீப் ஒலி வந்து டிஸ்பிளே வரவில்லை என்றால்..
1.நினைவகத்தை (RAM) சரியாக இணைக்கவும்
2.நினைவகத்தை மாற்றவும்.

9.Bad command are file name..
நீங்கள் கொடுத்த டாஸ்(DOS) கட்டளை சரியான கட்டளைதானா என்று சரிபார்க்கவும்.கட்டளையில் ஏதேனும் சிறு தவறு நேர்ந்திருந்தாலும் இவ்வாறு பிழை செய்தி வரும்.

10.Insufficient Disk Space
டிஸ்க்-ல் தகவலை பதிக்க போதிய இடம் இல்லையெனில் இவ்வாறு பிழைச்செய்தி வரும்.தேவையில்லாத கோப்புகளை அழித்துவிட்டால் இடம் கிடைக்கும்.


Friday, December 19, 2008

மின்சப்ளை பகுதி(SMPS)


மின்சப்ளை பகுதி
கணினியின் அனைத்து வன்பொருள்களுக்கு தேவையான மின்த்தேவையை தரக்கூடியது இந்த SMPS. கணினி ஒரு மின்னணு சாதனம் என்பதால் அது நேர்மின்னழுத்தத்தில் மட்டுமே இயங்கும்.அதனால் தான் நாம் இந்த SMPS -ஐ பயன்படுத்துகிறோம்.இது மாறுதிசை(AC) மின்னோட்டத்தை நேர்திசை(DC) மின்னோட்டமாக மாற்றுகிறது.
SMPS-லிருந்து வரும் நேர்மின்னழுத்தம்(DC) மதர்போர்டின் மின் இணைப்பான் மூலமாக மதர்போர்டின் அனைத்து பாகங்களுக்கும் செல்கிறது.
இந்த மின் இணைப்பான் இருவகைப்படும்.
1.AT வகை மின் இணைப்பான்
2.ATX வகை மின் இணைப்பான்
AT வகை மின் இணைப்பான்
இது இரண்டு 6 பின்களைக் கொண்ட மின் இணைப்பான்.இதில் +5v, +12v, Ground, -12v,-5v எனப் பலவகையான நேர்மின்னழுத்தம் பயன்படுத்தப்படுகிறது.இப்போது வரும் மதர்போர்டில் இது பயன்படுத்தப்படுவதில்லை.
ATX வகை மின் இணைப்பான்
இதில் பல வண்ண ஒயர்கள் பயன்படுத்தப்படுகிறது.ஒவ்வொரு வண்ணமும் அது கடத்தும் மின்னழுத்தத்தை குறிக்கிறது.இப்போது வரும் மதர்போர்டில் இந்த வகை இணைப்பான்களே பயன்படுத்தப்படுகிறது.







Friday, October 24, 2008

ஒரே கணினியில் லினக்ஸ் மற்றும் விண்டோஸ்XP -யை நிறுவுவது எப்படி?






எனது கணினி 1 ஜி.பி ராம் மற்றும் 60 ஜி.பி. நிலைவட்டை கொண்டது. இதில் எவ்வாறு விண்டோஸ் XP யையும் லினக்சையும் நிறுவுவது என்று இப்போது பார்ப்போம்..
முதலில் விண்டோஸ்XP மென்பொருள் சி.டி யை வைத்து உங்கள் கணினியில் விண்டோஸ்XP -யை நிறுவிக்கொள்ளவும்
60 ஜி.பி. நிலைவட்டில் 10 ஜி.பி இடத்தை விண்டோஸ் XP-க்கு ஒதுக்கிவிட்டு மீதம் உள்ள இடத்தில் பிறகு லினக்சை நிறுவுவதற்காக பார்டிசியன் செய்யாமல் விட்டுவிட்டேன்.
விண்டோஸ் XP -யை முழுவதும் நிறுவியபிறகு உங்கள் கணினியை ரீபூட் செய்யவும்.
இப்போது பெடோரா லினக்ஸ் சி.டி-யை வைத்து அதே கணினியை பூட் செய்யவேண்டும்.
லினக்ஸ் நிறுவுவது எவ்வாறு என்று ஏற்கனவே பார்த்துள்ளோம்.
எனவே நிறுவலின் போது வரும் நிலைவட்டு பகிர்தல் திரைக்கு வருவோம்...இங்கு மீதம் உள்ள 50 ஜி.பி இடத்தில் /boot பார்டிசியன்-க்கு 100 எம்.பி,swap பார்டிசியன்-க்கு 2 ஜி.பி, / ரூட் பார்டிசியன்-க்கு 20 ஜி.பி மற்றும் /home பார்டிசியன்-க்கு 25 ஜி.பி என பார்டிசியன்-களை உருவாக்கியுள்ளேன்.


இப்போது பூட் லோடர் கான்பிகுரேசன் திரை வரும்.இதில்தான் சில முக்கியமான செயல்களை செய்யவேண்டும்.ஏனென்றால் விண்டோஸ் XP பூட் லோடரால் பெடோரா லினக்ஸ்-ஐ உணர முடியாது. ஆனால் பெடோரா லினக்ஸ் பூட் லோடரால் -ஆல் விண்டோஸ் XP -யை உணர முடியும்.எனவே GRUB boot loader will be installed on என்பதை தேர்வு செய்துவிட்டு கட்டத்தில் உள்ள fedor core என்பதை தேர்வு செய்யவேண்டும்.
Next அழுத்தி பிறகு வரும் திரைகளில் தேவையான தகவலை கொடுத்து லினக்ஸ் நிறுவலை முடிக்கவும்.
கணினி ரீபூட் ஆனவுடன் இப்போது நமக்கு தெரிவது பூட் லோடர் திரையாகும்.
இங்கு Fedora Core என்பதை தேர்வு செய்தால் பெடோரா லினக்ஸ் பூட் ஆகும்.
WinXp அல்லது Other என்பதை தேர்வு செய்தால் விண்டோஸ் பூட் ஆகும்.


Tuesday, October 7, 2008

தமிழக அரசின் ஆன்லைன் நிலப்பட்டா இணையதளம்.

உங்களது வீடு,மனை போன்றவற்றின் விவரங்கள் (மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதி தவிர) அனத்தும் அந்தந்த மாவட்டம்,வட்டம்,கிராமம் வாரியாக கணினியில் பதியப்பட்டு தேவைப்படும் விவரங்களை இணையதளம் மூலமாக பெற்றுக்கொள்ள,தமிழக அரசின் ஆன்லைன் நிலப்பட்டா இணையதளத்தை தொடங்கியுள்ளது.
அரசு நிலம்,காலியிடம்,அரசுப் பதிவேடு,பட்டா,சிட்ட அடங்கள் விவரங்களை இந்த இணைய தளம் மூலம் சரிபார்த்துக்கொள்ளளாம்.இவ்வசதியினை தமிழக அரசுடன் தேசிய தகவல் இயலியல் மையமும் இணைந்து வெற்றிகரமாக செயல்படுத்தி வருகின்றனர்.

http://eservices.tn.gov.in/

500 ஜிபி ப்ளுரே டிவிடி




ஜப்பானின் பயனியர் நிறுவனம் 500ஜிபி கொள்ளளவு கொண்ட வட்டை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது.இது இன்னும் இரண்டு ஆண்டுகளிலோ அதற்கு முன்போ சந்தைக்கு வரலாம்.
அகச்சிவப்பு லேசர் கதிர்களுக்கு பதில் இந்த வட்டில் நீல நிற லேசர் கதிரை பயன்படுத்துவதால் இந்த பெயர் இதற்கு வந்தது.
ப்ளூரே வட்டுகள் 25 ஜிபி மற்றும் 50 ஜிபி கொள்ளளவில் கிடைக்கும்.இதில் இரண்டு அடுக்கில் எழுத்தக்கூடிய வட்டுகள் 50 ஜிபி கொள்ளளவு கொண்டவை.

ஜிமெயில் பயனாளர்களுக்கான செய்தி:


ஜிமெயில் பயனாளர்களுக்கான செய்தி:
ஜிமெயில் தனது பயனாளர்களுக்காக ஒரு புதிய பாதுகாப்பு முறையை ஏற்படுத்தியுள்ளது.
நீங்கள் உங்கள் அலுவலகத்திலோ அல்லது வெளியில் ப்ரௌசிங் செண்டரிலோ ஜிமெயில் பார்த்துவிட்டு லாக்-அவுட் செய்யாமல் வந்துவிட்டால் உடனடியாக வேறு கணினி மூலமாக லாகின் செய்து அந்த கணினியில் உள்ள உங்கள் ஜிமெயில் இணைப்பை துண்டிக்க முடியும்.
அல்லது உங்கள் ஜிமெயிலை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா என்றும் அறிந்து கொள்ளலாம்.
http://googlesystem.blogspot.com/2008/07/find-who-has-access-to-your-gmail.html

தமிழில் ஜிமெயிலை தமிழில் காண
உங்கள் ஜிமெயில் திரையில் மேல் பகுதியில் setting என்ற பகுதிக்கு சென்று ,அதில் Gmail display Language -ல் Tamil- தேர்வு செய்தால் உங்கள் ஜிமெயில் திரை இப்போது தமிழில் தெரியும்.

Monday, August 18, 2008

லினக்ஸ் வழங்கல்கள் (Linux Distribution)

லினக்ஸின் கருவை அடிப்படையாக கொண்டு மக்களின் எளிய பயன்பாட்டிற்காக வெளியிடப்படும் இயங்குதளங்கள் அனைத்தும் லினக்ஸ் வழங்கல்கள் என்று அழைக்கப்படுகிறது.
ஏற்கனவே சொன்னது போல் லினக்ஸ் ஒரு கட்டற்ற மென்பொருளாகும். இதனால் உலகெங்கும் இருக்கும் லட்சகணக்கான நிரலாளர்கள் பல்வேறு பயன்பாட்டிற்காக பலவிதமான மென்பொருள்களை வடிவமைத்து லினக்சை மேலும் மேலும் மெருகேற்றுகின்றனர்.
தொடக்க காலத்தில் ஒருவர் லினக்சை பயன்படுத்த வேண்டுமென்றால், யூனிக்ஸ் தொடர்பான சிறப்பு பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.இன்னும் சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் ஒரு சிறிய மென்பொருளை நிறுவுவதற்கு, அதற்கு தேவையான கோப்புகளை எங்கே விப்பது,எத்தனை கட்டளைகளை இயக்க வேண்டும், இதற்கான நிரலை எங்கிருந்து இயக்கவேண்டும் போன்றவற்றை அறிந்திருக்க வேண்டும்.
இதனால் லினக்ஸ் பொதுமக்களின் பயன்பாட்டிலிருந்து சற்று விலகியே இருந்தது.
இலவசமாக கிடைக்கும் இந்த லினக்சை சாதரன மக்களும் எப்படி நிறுவுவது,பயன்படுத்துவது என்று எண்ணிய போதுதான் இந்த வழங்கல்கள் என்ற எண்ணக்கரு உருவானது என்று சொல்லலாம்.

தொடக்ககாலத்தில் உருவான வழங்கல்கள்:
MCC Interim Linux-இது 1992 ஆம் ஆண்டு மான்செஸ்டர் பல்கலை கழகத்தால் வெளியிடப்பட்டது.
1992-ல் SLS (Soft Landing Linux System) என்ற வழங்கலை A&M பல்கலை கழகத்தை சேர்ந்த ஒருவரால் வெளியிடப்பட்டது மேற்கண்ட எந்த வழங்கல்களும் சரியாக பராமரிக்கப்படாத்தால் பாதியிலே கைவிடப்பட்டது.
ஆனால் திரு.பேட்ரிக் வால்கர்டிங்(Patric Volkerding) என்பவர் SLS–யை அடிப்படையாகக் கொண்டு ஸ்லாக்வேர் என்ற வழங்கலை உருவாக்கினார்.இதுவே இன்றுவரை தொடர்ந்து வரும் மூத்த லினக்ஸ் ஆகும்.
தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட லினக்ஸ் வழங்கல்கள் உலகெங்கும் கிடைக்கின்றன.இதைப்பற்றி மேலும் தகவல்கள் அறிய கீழ்கண்ட இணையதளத்தை பார்வையிடவும்.
http://www.linux.org/dist
இப்போது பலராலும் பய்ன்படுத்தப்படும் லினக்ஸ் வழங்கல்களில் சில

பெஃடோரா (Fedora)
ரெட் ஹாட் (RedHat)
சுசே (Suse)
மாண்ட்ரிவா (Mandriva)
டெபியன் (Debian Linux)
உபுண்டு (Ubendu Linux)
நாப்பிக்ஸ் (Knoppix)
மற்றும் பல ...

டெபியன் லினக்ஸ்:
இது டெபியன் ப்ராஜெக்ட் என்ற அமைப்பு மூலம் வெளியிடப் படுகிறது.இது 1993 –ம் ஆண்டு திரு.இயன்மர்டாக்(Ian Murdock) என்பவரால் முதலில் தொடங்கப்பட்டது.
DEBIAN என்பதில் DEB என்பது அவரது மனைவி பெயரான Debra என்பதிலிருந்தும் IAN என்பது அவரது பெயரிலிருந்தும் எடுத்த சொல்லாகும்.
இது முழுதும் இலவசமாக கிடைக்ககூடிய இயங்குதளமாகும்.
இதில் நிறுவப்படும் மென்பொருள்கள் dpkg என்ற மாதிரியில் இருக்கும்.dpkg என்றால் Debian Package என்பதன் சுருக்கம் ஆகும்.இதற்கு உலகெங்கும் லட்சக்கணக்கான பயனாளர்கள் உள்ளனர்.இதில் இன்னொரு வியப்பான செய்தி என்னவென்றால் இந்த டெபியன் லினக்சிற்கு 15,000 க்கும் அதிகமான இலவச மென்பொருள்கள் கிடைக்கின்றன.டெபியன் லினக்சை பதிவிறக்கம் செய்ய என்ற இணைய தளத்திற்கு செல்லவும்.

உபுண்டு லினக்ஸ்
இது டெபியன் லினக்சை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இயங்குதளம்.இதில் பயன்படுத்தப்படும் எல்லா மென்பொருள்களும் க்னூ-வின் கட்டற்ற மென்பொருள் ஆகும்.இதன் புதிய பதிப்பு ஒவ்வொரு ஆறுமாதத்திற்கு ஒருமுறை வெளியிடப்படுகிறது.இதன் இன்னொரு சிறப்பு என்னவென்றால் உபுண்டு பதியப்பட்ட குறுவட்டுகளை (சி.டி) தபால் மூலம் பெறுவதற்கு நாம் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.இதற்கு திரு.மார்க் ஷட்டில்வர்த்(Mark Shuttle Worth) என்பவருடைய கனோனிகல்(Cononical Ltd) நிறுவனம் உதவுகிறது.இவை மேல்மேசை மெற்றும் மட்க்கணினிகளுக்கு சிறப்பான் ஆதரவை வழங்குகின்றது.
உபுண்டு என்ற ஆப்பிரிக்க சொல்லுக்கான் பொருள் மானுட நேயம் ஆகும்.உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது தாய்மொழியில் இலவசமாக கிடைக்க கூடிய இயங்குதளமாக இது அமையும்.
உபுண்டு தவிர கே உபுண்டு,எக்ஸ் உபுண்டு,எடுபுண்டு,கோபுண்டு என பதிப்புகளில் வெளிவருகிறது.உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் லினக்ஸ் வழங்கல் இதுவாகும்.
உபுண்டு லினக்ஸ் சி.டி-யை இலவசமாக பெற...
உபுண்டு லினக்சை நிறுவும் கையேடு-தமிழில்
கேஉபுண்டு லினக்சை நிறுவும் கையேடு-தமிழில்

நாப்பிக்ஸ் லினக்ஸ்
இதுவும் டெபியன் லினக்சை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இயங்குதளம்.இதன் சிறப்பு என்னவென்றால்,இது நேரலை குறுவட்டு (Live CD) லினக்ஸ் ஆகும்.அதாவது உங்கள் கணினியில் நிறுவாமல் தற்காலிகமாக லினக்சை பயன்படுத்தி பார்க்கமுடியும்.மேலும் விளக்கமாக கூற வேண்டுமானில், கணினியின் வன்தட்டில் லினக்சை நிறுவாமல் இந்த குறுந்தகடு மூலம் கணினியை பூட் செய்து தற்காலிகமாக லினக்சை பயன்படுத்திக்கொள்ளலாம்.தேவையில்லை என்றால் குறுந்தகடை எடுத்து நம் வன்தகட்டிலிருந்து பூட் செய்துகொள்ளலாம்.இந்த லினக்சை பதிவிறக்கம் செய்ய http://www.knoppix.org
என்ற இணைய தளத்திற்கு செல்லவும்.

ரெட் ஹாட்/பெஃடோரா லினக்ஸ்:
ரெட் ஹாட் 1998-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.இதன் ஒன்பதாவ்து பதிப்பிற்க்கு பிறகு 2003-ம் ஆண்டு இது இரண்டு பிரிவானது.1. பெஃடோரா லினக்ஸ் 2. ரெட் ஹாட் லினக்ஸ்.
பெஃடோரா(Fedora) குழுமம் லினக்சை வடிவமைத்து வெளியிடுகிறது.இதற்கு ரெட் ஹாட் நிறுவனம் உதவுகிறது.இந்த பெஃடோரா லினக்ஸ் வீடு மற்றும் சிறிய அலுவலக பயன்பாட்டிற்கு இலவசமாக வெளியிடப்படுகிறது.
ரெட் ஹாட் லினக்ஸ் பெஃடோராவை அடிப்படையாக கொண்டு சர்வர் கணினிகளின் பயன்பாட்டிற்காக வெளியிடப்படும் லினக்ஸ் ஆகும்.இதை ரெட் ஹாட் என்டர்ப்ரைஸ் லினக்ஸ் (RedHat Enterprise Linux) என்பர்.இதன் உரிமம் இலவசமாக கிடைக்காது. விலை கொடுத்து வாங்கவேண்டும்.
பெஃடோரா லினக்சை நிறுவும் கையேடு – தமிழில்..

சூசே லினக்ஸ்:
இதுவும் ஒரு புகழ்பெற்ற லினக்ஸ் வழங்கள் ஆகும். SUSE என்பது Software and Systems Entwicklung என்ற ஜெர்மனி சொல்லிலிருந்து வந்தது.இதற்கு தகுந்த ஆங்கில சொல் Software and System Development. இப்போது இந்த சூசே லினக்ஸ் நாவல் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது.ரெட் ஹாட்-ல் உள்ளது போல் மேல்மேசை கணினிகளுக்கு என்று ஒரு இலவச வெளியீடும் பெரிய அலுவலக கணினிகளுக்கு விலை கொடுத்து வாங்ககூடிய வெளியீடுகளும் உள்ளது.சான்றாக சூசே லினக்ஸ் என்டர்ப்ரைஸ்
சூசே கணினிகளின் வன்பொருள் மற்றும் மென்பொருள்களை மேலாண்மை செய்ய Yast என்ற மென்பொருள் கருவி பயன்படுத்தப்படுகிறது.
http://www.novell.com/linux/

மாண்ட்ரிவா லினக்ஸ்
இதன் பழைய பெயர் மாண்ட்ரேக்(Mandrake) ஆகும்.1998-ம் ஆண்டு பிஃரான்சில்(France) ரெட் ஹாட் லினக்சை அடிப்படையாக கொண்டு தொடங்கப்பட்ட லினக்ஸ்.இதிலும் ரெட் ஹாட் போல் மேல்மேசை கணினிகளுக்கு என்று ஒரு இலவச வெளியீடும் பெரிய அலுவலக கணினிகளுக்கு விலை கொடுத்து வாங்ககூடிய வெளியீடுகளும் உள்ளது.இதில் உள்ள (Smart Package Manager) மற்ற லினக்ஸ் வழங்கல்களின் மென்பொருள்களை ஆதரித்து நிறுவும் திறனுடையது.
அதாவது ரெட் ஹாட் என்றால் rpm மாதிரி மென்பொருள்கள், டெபியன் என்றால் dpkg மாதிரி மென்பொருள்கள்,இவை அனைத்தையும் இது ஆதரிக்கும்.அது மட்டுமல்லாமல் Mandriva Control என்ற கருவியின் மூலம் கணினியின் வன்பொருள்/மென்பொருள்களை மேலாண்மை செய்ய முடியும்.

http://www.mandriva.com/

உலகமுழுதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்பலாம் …

ஆச்சர்யமாக இருக்கிறதா...உங்கள் நண்பர்கள் உலகில் எங்கு இருந்தாலும் அவர்களுக்கு இனி இலவசமாக குறுஞ்செய்தியை இணையம் மூலமாக அனுப்பலாம்.
JAXTR என்ற அமெரிக்க நிறுவனம் இணையம் மூலமாக குறுஞ்செய்தியை(SMS) முழுவதும் அனுப்பும் சேவையை தொடங்கியுள்ளது.

http://www.jaxtr.com/user/index.jsp

யார் வேண்டுமானாலும் இந்த இணையதளத்தில் செய்து தங்களுக்கென்று ஒரு கணக்கை இலவசமாக உருவாக்கிகொள்ளலாம்.இதன் மூலம் வெளிநாட்டில் உள்ள உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இலவசமாக SMSஅனுப்பிக்கொள்ளலாம்.
இதன் இன்னொரு சிறப்பு குறுஞ்செய்தியை பெறுபவர்கள் Jaxtr–ல் மெம்பராக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

கீழ்கண்ட இணையதளம் மூலம் இந்தியாவிற்குள் SMS அனுப்பமுடியும்
http://www.way2sms.com
http://www.indyarocks.com

http://www.youmint.com

Thursday, August 14, 2008

வீடு தேடி வரும் ஓப்பன் சொலாரிஸ்

மைக்ரோ சிஸ்டம் x86 கட்டமைப்பு (நாம் வீடுகளில் பயன்படுத்தும் கணினி) கணினிகளுக்கான சொலாரிஸ் இயக்குதள மென்பொருள் சி.டி யை இலவசமாக வழங்கி வருகிறது.
கிழ்கண்ட இணைய தளத்தில் உங்களது இருப்பிட தகவலை கொடுத்தால் எந்தவித கட்டனமும் இன்றி உங்கள் வீட்டிற்கு மென்பொருள் சி.டி யை அனுப்பிவைக்கின்றனர்.
http://www.opensolaris.com/get/index.html
OpenSolaris Free CD Order Form

Wednesday, August 6, 2008

கணினி வன்பொருள்களின் தற்போதைய விலை பட்டியல்

சென்னையில் கணினி சம்பந்தமான மின்னணு சாதனங்கள் வாங்கணும் என்றால் எல்லோரும் உடனே சொல்வது ரிட்சி ஸ்ட்ரீட்.இந்த தெருவை சென்னையின் "எலக்ட்ரானிக் சந்தை" எனலாம்.
நானும் எனது நண்பரும் ஒரு கணினியை ஒருங்கிணைப்பதற்காக தேவையான வன்பொருள்களை வாங்க ரிட்சி ஸ்ட்ரீட் கடந்தவாரம் சென்றோம்.கிழ்கண்ட வன்பொருள்களை வாங்கி புது கணினியை ஒருங்கிணைத்தோம்.
Processor: Pentium 4 core 2 Duo 2.53 GHz
Ram :DDR -2: 2GB
HDD: Seagate 160GB
Motherboard: INTEL DG 31 PR
DVD RW:Samsung
Mouse:USB Optical
Monitor:LCD 17" Samsung (Black)
Cabinet: i-ball
UPS: Wipro
Speaker:Creative
இதன் மொத்த விலை ரூ 26,000 -யை தொட்டது.

கணினி வன்பொருள்களின் (சென்னையில் ) அன்றைய விலை நிலவரத்தை அறிய கிழ்கண்ட இணைய தளம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது .
http://www.novatroncomputers.in/Productslist.aspx

படித்ததில் பிடித்தது

ஐ.டி. (தகவல் தொழில்நுட்ப) துறையில் பணிபுரிபவர்களுக்கான அறிவுரை என்று விகடனில் படித்தேன்.பிடித்திருந்தது அதை இங்கு பதிவு செய்துள்ளேன் உங்களுக்காக

#நீங்கள் கூடுதல் புத்திசாலிகள்- கெட்டிக்காரர்கள். எந்த ஒரு விஷயத்தையும் பளிச்சென்று பிடித்துக் கொள்ளும் கூர்மதி உங்களுடையது. வெற்றி என்பது உங்களுக்கு ஒரு விளையாட்டுப் பொருள். வாழ்க!

#பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல! உங்களின் பெற்றோர் தங்களது பணிக் காலத்தின் இறுதியில் வாங்கும் ஊதியத் தொகையை, நீங்கள் முதல் மாதமே வாங்கி விடலாம். அதற்காக, அவர்களை விடவும் நீங்கள் அதிபுத்திசாலி என்றோ, திறமையாளர் என்றோ, பெரிய மனிதராகவோ எண்ண வேண்டாம்.

#உறவினர்களை அற்ப ஜந்துக்கள் போல நினைக்க வேண்டாம். தம்பி- தங்கைகளைப் படிக்க வைக்க நிறைய செலவு செய்யுங்கள். குடும்பத்தின் பந்த- பாசத்தை, இணைய தளத்தில் டௌன் லோட் செய்ய முடியாது!

#வெளிநாட்டுப் பணம் வரலாம்... வெளிநாட்டுப் பண்பாடு வரலாமா? பிற மனிதர்கள் எல்லோருமே நாம் பயன்படுத்திக் கொள்ள மட்டும் அல்ல!

#பத்து ரூபாய் கூடுதல் சம்பளம் என்றதும் கம்பெனியைக் கைகழுவுவது கொஞ்ச காலம் பெருமையாகத் தெரியலாம். ஆனால், ஒரு நாள்... இந்தத் துறையின் செயல்பாடே இதனால் ஸ்தம்பிக்க வாய்ப்பிருக்கிறது.

#உணவு, உறக்கம், ஓய்வு, காலா காலத்தில் இல்லாதபடி உடம்பை- மனதைச் சீர்குலைத்தால், 40 வயதுக்குப் பிறகு உயிர் வாழ்வதே பிரச்னையாகி விடும். யோசியுங்கள்.

#எப்போதும் ஏ.ஸி-யில் இருப்பதால், உங்களுக்கு வியர்வையே வருவதில்லை. அது, உடலுக்குக் கெடுதல். உடலை வியர்க்க விடுங்கள். தண்ணீர்த் தாகம் எடுக்காத போதும் நீர் அருந்துங்கள். கண்ட கண்ட குளிர்பானங்கள் குடிப்பதை விட்டு விட்டு, எலுமிச்சை, ஆரஞ்சு, ஆப்பிள், திராட்சை சாறு அருந்துங்கள். பார்லியும் சேர்த்துக் கொள்ளுங்கள். கண்களிலும் கவனம் வையுங்கள்.

#உட்கார்ந்தே இருப்பதால் எடை கூடும்; சர்க்கரை அதிகரிக்கும். கொலஸ்ட்ராலும் பழுத்துக் கிடக்கும். மூளைக்கு வேலை என்பதால் ரத்த அழுத்தமும், சக்கைப் போடு போடும். எல்லாவற்றையும் எதிர்பார்த்து வெற்றி கொள்ளுங்கள்.

#காதலிக்கும்போது அல்லது திருமணத்துக்குப் பெண் தேடும் போது... சம்பளம், வேலைவாய்ப்பு, செலவழிக்கும் இயல்பு போன்றவற்றை இரண்டாம்பட்சமாக வைத்துக் கொண்டு, ஒழுக்கம், குணம், பண்பாடான குடும்பம் ஆகிய விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள்.

#'இன்று போலவே என்றும் சம்பளம் வரும்' என்று கனவு காணாதீர்கள். சிக்கனமாக செலவழிக்கப் பழகுங்கள்.

#உங்களால் அதிகம் செலவழிக்க முடியும் என்பதற்காக, சிரமப்பட்டு சம்பாதிப்பவர்களது மனம் புண்படும்படி ஜம்பம் அடிக்காதீர்கள்.

#அந்நிய நாட்டின் தயவில் அதிகம் சம்பாதிப்பவர்களாகிய பலரும் இந்த நாட்டு வெற்றிக்கு உழைப்பவரை இளக்காரமாக நினைக்காதீர்கள்.

#வெளிநாடுகளில் வேலை பார்த்துவிட்டு ஊருக்குத் திரும்பும் போது, ஓட்டல்களில் தங்கிக் கொண்டு... உறவினர்களை- அம்மா- அப்பாவை, ''என்னால் வர முடியாது. இங்கு வந்து பார்... ஆட்டோவுக்கு வேண்டுமானால் காசு தருகிறேன்!'' என்று கூறி அசிங்கப்படுத்தாதீர்கள். பணத்தை விட ரத்தம் கனமானது.

#வெளிநாடுகளில் பிறந்து வளரும் குழந்தைகளுக்கு எதிர்ப்புச் சக்தி குறைவு என்பது உண்மைதான். என்றாலும் சிறிது நேரமாவது தாத்தா- பாட்டி... அதாவது உங்களின் பெற்றோர், உங்கள் பிள்ளையைக் கொஞ்சுவதற்கு- உணவு ஊட்டு வதற்கு அனுமதி கொடுங்கள்.

உங்களை காயப்படுத்துவதாக இந்த பதில் அமைந்தால், என்னை மான்னியுங்கள் உங்களை நோகடிப்பது எனது நோக்கம் அல்ல. இவை யாவும், உங்களைப் போன்றோரின் பெற்றோர்கள், உங்களிடம் சொல்ல முடியாமல் என்னிடம் புலம்பிய புலம்பல்கள். நான் வெறும் தபால்காரன்... அவ்வளவே! நமக்கு வரும் எந்த நோட்டீஸூக்கும் தபால்காரனை நோக முடியாது.

Saturday, July 26, 2008

தெரியுமா உங்களுக்கு?( நிறுவியவர்கள்)

1.கணினியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
சார்லஸ் பாபேஜ்

2.இண்டெல் நிறுவனத்தை நிறுவியவர்கள்.
ராபர்ட் நாய்ஸ் மற்றும் கார்ல்ன்மூர்.

3.மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை நிறுவியவர்கள்.
பில்கேட்ஸ் மற்றும் பால் ஆலன்.

4.ஆப்பிள் நிறுவனத்தை நிறுவியவர்கள்
ஸ்டீவ்ஜாப்ஸ் மற்றும் ஸ்டீவ் ஓஸ்னிக்

5. ஐபிஎம் (IBM) நிறுவனத்தை நிறுவியவர்கள்
ஹெர்மன் ஹோலரித் மற்றும் ஜேக்கர்ட்(1911)

6.இலவச மென்பொருள் கழகத்தை நிறுவியவர்

ரிச்சர்ட் ஸ்டால்மேன்

7.சன் மைக்ரோசிஸ்டம் நிறுவனத்தை நிறுவியவர்கள்
வினோத் கோசலா ,ஸ்காட் மேகன்லே ,பில் ஜாய் மற்றும் ஆண்டி பெக்டோல்சிம்


8.எஎம் டி (AMD) நிறுவனத்தை நிறுவியவர்கள்
ஜெர்ரி சாண்டர்ஸ் ,eட்டர்னி மற்றும் சிலர்

தெரியுமா உங்களுக்கு? (கண்டுபிடித்தவர்கள்)

1.ட்ரான்சிஸ்டரை கண்டுபிடித்தவர்கள்
ஜான்பர்டீன்,வில்லியம் சாக்லி மற்றும் வால்டர்ப்ரேட்டேன்

2.நுன்செயலியை(மைக்ரோபிராசசர்) கண்டுபிடித்தவர்கள்
டெட் ஹாஃப்(1971 –இண்டெல்)

3.குறைமின்கடத்தியை கண்டுபிடித்தவர்
இராபர்ட் நாய்ஸ்(1968)

4.இண்டக்ரல் சர்க்யூட் என்னும் ஐசி–யை கண்டுபிடித்தவர்
கில்பி

5.எலக்ட்ரானை கண்டுபிடித்தவர்
ஜே.ஜே.தாம்சன்

6.நியூட்ரானை கண்டுபிடித்தவர்
சாட்விக்

7.முதல் மெளசை வடிவமைத்தவர்
டக்ளஸ் எங்கால்பர்ட்(Douglas Engelbart)

8.முதல் லேசர் கதிரை கண்டுபிடித்தவர்
தியோடர் ஹெரால்ட்மெய்மன்(1960)

9. CRT-யை கண்டுபிடித்தவர்
ஃபெர்டினந்த் பிரான்(1987)

10.TCP நெரிமுறையை உருவாக்கியவர்
விண்ட்செர்ஃப்,ஸ்டிவ் கிராக்கர் மற்றும் டோனி ஹோகன்(1978)

11.முதல் டிஜிட்டல்கணினியை வடிவமைத்தவர்
ஹோவர்ட் ஐய்க்கன்(1944)

12. C -மொழியை உருவாக்கியவர்கள்
டென்னிஸ் ரிட்சி மற்றும் கென் தாம்ஸன்

13.லினக்சை உருவாக்கியவர்
லினஸ் டோர்வால்ட்

தெரியுமா உங்களுக்கு?

1. ஒரு இணைய ஆண்டுக்கு 55 நாட்கள்

2. கணினியின் மூளை என்றழைக்கப்படுவது?
நுண்செயலி

3. CD மற்றும் DVD களின் விட்டம்
120 மி.மீ

4. CD டிரைவில் X என்பது 150 தகவல் பறிமாற்ற வேகத்தை குறிக்கிறது

5. கணினியில் உள்ள SMPS மாறுதிசை(AC) மின்னோட்டத்தை நேர்திசை(DC) மின்னோட்டமாக மாற்றுகிறது

6. CD-ல் தகவல்கள் மேடு பள்ளமாக சுருள் வடிவில் சேமிக்கப்படுகிறது

7. CD டிரைவில் தகவல்கள் லேசர் கதிரை பயன்படுத்தி படிக்கப்படுகிறது

8. உலகின் முதல் டிஜிட்டல் கணினியின் நீளம் 51 அடி அகலம் 8 அடி.

9. ஸ்டேடிக் ராம் நினைவகங்கள் பிஃளிப்-ப்ளாப்(Flip flop) கொண்டு வடிவமைக்கப்படுகிறது.

10. டைனமிக் ராம் நினைவகங்கள் கெப்பாசிட்டர் கொண்டு வடிவமைக்கப்படுகிறது.

11. உலகின் முதல் நுண்னியக்கியான் 4004 –ல் உள்ளிணைக்கப்பட்ட டிரான்சிஸ்டர்களின் எண்ணிக்கை சுமார் 2300

12. முதல் தலைமுறை கணினிகள் வால்வுகள் கொண்டு வடிவமைக்கப்பட்டன.

13.USB -2 –ன் தகவல் பறிமாற்ற வேகம் வினாடிக்கு 460 மெகா பைட் ஆகும்.

14. லேசர் ப்ரிண்டரில் தகவல்களை அச்சடிக்க டோனர்(toner) என்னும் உலாகப்பொடி பயன்படுத்தப்படுகிறது.

Tuesday, July 22, 2008

கணினி முன் எவ்வாறு அமர வேண்டும்


கணினி முன் அமரும் போது கவனிக்க வேண்டியது

Monday, July 14, 2008

தகவல் தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படும் அலகுகள்(Units)

தகவல் கொள்ளளவு அலகு:
ஒரு கணினியின் தகவல் கொள்ளளவை கீழ்கண்ட அலகுகளில் அளவிடுகின்றனர்.
இது பெரும்பாலும் நினைவகம்(RAM),வட்டு(Disk) கொள்ளளவை அளவிட பயன்படுகிறது.
(எ.கா)
ஹார்ட் டிரைவ் கொள்ளளவு 40ஜிபி
CD கொள்ளளவு 650 எம்.பி
1 பிட் என்பது பைனரி எண்ணில் 0 அல்லது 1 ஆகும்.
4 பிட்= 1 நிப்பிள்
8 பிட் = 1 பைட்
1024 பைட்= 1 கிலோ பைட் (KB)
1024 கிலோ பைட் = 1 மெஹா பைட்(MB)
1024 மெஹா பைட் = 1 ஜிகா பைட்(GB)
1024 ஜிகா பைட் = 1 டெரா பைட்(TB)
1024 டெரா பைட் = 1 பீட்டா பைட்(PB)
1024 பீட்டா பைட் = 1 எக்ஸா பைட்(EB)
1024 எக்ஸா பைட் = 1 சேட்டா பைட்(ZB)
1024 சேட்டா பைட் = 1 யோட்டா பைட்(YB)
----------------------------------------------------------------------------------------------------------
மின்னணு சாதனங்கள் செயல்படும் வேகத்தை “ஹெர்ஸ்” என்ற அலகால் அளவிடுகின்றனர்.
(எ.கா)
எனது பெண்டியம் 4 பிராஸசர் 2 GHz வேகம் கொண்டது.
எனது SDRAM 133 MHz வேகம் கொண்டது.
1 =வினாடிக்கு ஒரு சுழற்சி(Hz)
1000 = 1 கிலோ ஹெர்ஸ்(KHz)
1000 = 1 மெகா ஹெர்ஸ்(MHz)
1000 = 1 ஜிகா ஹெர்ஸ்(GHz)
1000 = 1 டெரா ஹெர்ஸ்(THz)
--------------------------------------------------------------------------------------------------------------
சூப்பர் கணினியின் வேகம் “ப்ளாப்ஸ்” என்ற அலகால் அளவிடப்படுகிறது.

FLOPS = Floating point Operation Per Second

Friday, July 11, 2008

மாதர்போர்ட் என்றால் என்ன?

மதர்போர்ட்
இது கணினியின் அனைத்து வன்பொருள்களும் சங்கமிக்கும் ஒரு பெரிய சர்க்யூட் பலகையாகும்.இதை ஆங்கிலத்தில் Printed Circuit Board (PCB ) என்பர்.ஏனென்றால் சர்க்யூட்கள் அனைத்தும் பலகையிலே அச்சடிக்கப்படுவதால் இது பிரின்டட் சர்க்யூட் போர்ட் என்று அழைக்கப்படுகிறது.



மின் இணைப்பான்:
மின்சப்ளை பகுதியிலிருந்து(SMPS) வரும் மின்சாரத்தை மதர்போர்டுக்குக் கொடுக்கு உதவுகிறது.
பிராஸசர் இணைப்பான்:

பிராஸசரை மதர்போர்டுடன் இணைக்கப்பயன்படுகிறது.
சில்லுத்தொகுப்பு:

பலவகை கட்டுப்பாட்டு சர்க்யூட்கள் உள்ளிணைக்கப்பட்ட ஒரு சில்லு ஆகும்.இதை மையமாக வைத்தே மதர்போர்ட் வடிவமக்கப்படுகிறது.
நினைவக இணைப்பான்: ராம் நினைவகத்தை மதர்போர்டுடன் இணைக்கப்பயன்படுகிறது.இது சிம்(SIMM),டிம்(DIMM),ரிம்(RIMM) எனப் பலவகைப்படும்.
பயாஸ் ரோம்(BIOS):இது கணினியின் அடிப்படை செயல்களுக்கான மென்பொருளை கொண்டிருக்கும் அழியா நினைவகம் ஆகும்.
சீமாஸ் மின்கலம்(CMOS Battery):

ஒரு ரூபாய் நாணயம் அளவு சிறிய மின்கலம் மதர்போர்டில் இருக்கும்.நமது வன்பொருள்களை பற்றிய தகவல்களை சேமித்துவைத்திற்கும் நினைவகத்திற்கு தொடர்ந்து மின்சப்ளை கொடுப்பதற்காக உள்ளது.

Thursday, July 3, 2008

தமிழில் விண்டோஸ் மற்றும் ஆபிஸ்

விண்டோஸ் மற்றும் ஆஃபிஸ் ஆகியவற்றை தமிழிலே காணவேண்டுமா?
மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்திய மொழிகளுக்கான இடைமுகத்தை தனது இயங்குதளம் மற்றும் ஆஃபிஸ் மென்பொருள் ஆகியவற்றிற்கு வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் நாம் விண்டோஸ் மற்றும் ஆஃபிஸ் ஆகியவற்றை தமிழிலே அணுகலாம்.ஆம் முழு தமிழ் கணினியாயாக விண்டோசை இயக்க முடியும்.

மென்பொருளை பதிவிறக்குவதற்கான இணைப்புகள் கீழே உள்ளன
Office 2003 தொகுப்பிற்கான தமிழ் இடைமுகத் தயாரிப்பு, பெரும்பான்மையான Office 2003 பயனீட்டாளர் இடைமுகத்திற்கு, தமிழ் இடைமுகத்தை அளிக்கிறது
Office 2003 தமிழ் இடைமுக தயாரிப்பு


Office 2007 தொகுப்பிற்கான தமிழ் இடைமுகத் தயாரிப்பு, பெரும்பான்மையான Office 2007 பயனீட்டாளர் இடைமுகத்திற்கு, தமிழ் இடைமுகத்தை அளிக்கிறது

Office 2007 – தமிழ் இடைமுக தயாரிப்பு

Windows XP தொகுப்பிற்கான தமிழ் இடைமுகத் தயாரிப்பு, பெரும்பான்மையான Windows XP பயனீட்டாளர் இடைமுகத்திற்கு, தமிழ் இடைமுகத்தை அளிக்கிறது

Windows XP ® தமிழ் இடைமுக தயாரிப்பு

Windows Vista தொகுப்பிற்கான தமிழ் இடைமுகத் தயாரிப்பு, பெரும்பான்மையான Windows Vista பயனீட்டாளர் இடைமுகத்திற்கு, தமிழ் இடைமுகத்தை அளிக்கிறது

Windows Vista மொழி இடைமுகத் தொகுப்பு

இந்த தகவலிறக்கத்தை நிறுவ:
1. இந்த LIP.exe கோப்பை தகவலிறக்கம் செய்ய தகவலிறக்கம் பொத்தானை (மேலேயுள்ளது) கிளிக் செய்த பின்னர் கோப்பை உங்கள் நிலை வட்டில் சேமிக்கவும்.
2. அமைவு நிரலை துவங்க உங்கள் நிலை வட்டில் உள்ள LIP.exe நிரல் கோப்பை இருமுறை கிளிக் செய்யவும்.
3. நிறுவுதலை நிறைவு செய்ய திரையில் உள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றவும்.
4. விருப்பச் செயல்: Tamil_GS.exe கோப்பை தகவலிறக்கம் செய்து, உங்கள் நிலை வட்டில் சேமிக்கவும். பின்னர் உங்கள் நிலை வட்டில் உள்ள Tamil_GS.exe நிரல் கோப்பை இரு-கிளிக் செய்யவும், நிறுவலை நிறைவு செய்ய திரையில் உள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும்.

வழிகாட்டுதல்கள்:
பயனீட்டாளர் இடைமுக மொழியை Office 2003 பதிப்பு தமிழ் இடைமுக தயாரிப்பின் பயனீட்டாளர் இடைமுக மொழிக்கு மாற்ற, கீழ்கண்ட செயல்களை பின்பற்றவும்:
1. நீங்கள் Start மெனுவில், All Programs சுட்டிக்காட்டி, Microsoft Office சுட்டிக்காட்டி, Microsoft Office Tools என்பதில் சுட்டிக்காட்டவும், பின்னர் Microsoft Office 2003 Language Settings கிளிக் செய்யவும்.
2. பின்னர் User Interface and Help தாவலில், Display Office 2003 in பட்டியலில், நீங்கள் காண்பிக்க விரும்பும் மொழியை தேர்ந்தெடுக்கவும்.
3. பின்னர் OK கிளிக் செய்யவும்.
நீங்கள் தேர்ந்தெடுக்கும் மொழி அமைப்புகள், அடுத்த முறை Office பயன்பாடுகளை நீங்கள் துவங்கும் போது செயற்படுத்தப்படும்.


இந்த தகவலிறக்கத்தை அகற்ற:
1. அனைத்து நிரல்களிலிருந்தும் வெளியேறவும்.
2. நீங்கள் Start மெனுவில், Settings சுட்டிக்காட்டி, பின்னர் Control Panel என்பதில் கிளிக் செய்யவும்.
3. அங்கு Add/Remove Programs என்பதை இரு-கிளிக் செய்யவும்.
4. தற்போது நிறுவப்பட்டுள்ள நிரல்கள் பட்டியலில், Microsoft Office 2003 Edition Tamil Interface Pack கிளிக் செய்யவும். பின்னர், Remove அல்லது Add/Remove கிளிக் செய்யவும். உரையாடல் பெட்டி தோன்றினால், நிரல் அகற்ற வழிகாட்டுதல்களை பின்பற்றவும்.
5. நிரலை அகற்ற விரும்புகிறீர்கள் என்பதை உறுதி செய்ய Yes அல்லது OK கிளிக் செய்யவும்.

Wednesday, July 2, 2008

விண்டோஸ் வாழ்நாள் சுழற்சி

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது ஒவ்வொரு மென்பொருளுக்கும் குறிப்பிட்ட வாழ்நாளை வகுத்துள்ளது.
அதாவது மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிதாக வெளியிடும் ஒவ்வொரு மென்பொருளுக்கும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை ஆதரவு தருவது அதன்பின் அந்த மென்பொருளுக்கான ஆதரவை முடித்துக்கொண்டு அதற்கு அடுத்த பதிப்பிற்கு அதரவு வழங்குவது ஆகும்.
இதை மென்பொருள் வாழ்நாள் சுழற்சி (லைப் சைக்கிள்) என்பர் .
விண்டோஸ் இயக்குதளத்திற்கான வாழ்நாள் சுழற்சியை கீழே காணலாம்.

:அட்டவணை:
இதன்படி மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது விண்டோஸ் 2000 இயக்குதள வெளியீட்டை கடந்த 2004-ம் ஆண்டுடன் நிறுத்திவிட்டது.
விண்டோஸ் XP வெளியீட்டை கடந்த ஜூன் 30 உடன் நிறுத்தியுள்ளது. இனி விண்டோஸ் XP-க்கான மைக்ரோசாப்ட் மென்பொருள் உரிமம் கிடப்பது அரிது .

பில்கேட்ஸ் ஓய்வு

மென்பொருள் உலகில் முடிசூடா மன்னனாக இருந்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அதிபர் திரு.பில்கேட்ஸ் கடந்த ஜூன் 27-ம் தேதி தனது பணியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.


அவரது வாழ்க்கை குறிப்பு சிறு கண்ணோட்டம்

குடும்பம்

பிறந்தது :அக்டோபர் 28 -ஆம் தேதி 1955
தந்தை : வில்லியம் கேட்ஸ்
தாயார்: மேரி கேட்ஸ்
1994 -ஆம் ஆண்டில் மெலிண்டா-வை புத்தாண்டு தினத்தில் திருமணம் செய்தார்.
மூன்று குழந்தைகள் : ஜெநிஃபர் கேதரின் (1996),
ரொறி ஜான் (1999),
அடேல்(2002)

தொழில் வளர்ச்சி
தனது 17-வது வயதில் பள்ளிகளுக்கான நேர அட்டவணையை உருவாக்கும் மென்பொருளை எழுதி $ 4,200 அமெரிக்க டாலருக்கு விற்றார். இது அவரது முதல் மிகப்பெரிய வருமானம்.

கணினி மென்பொருள் மீது கொண்ட ஆர்வத்தால் தனது கல்லூரி படிப்பை பாதியிலே துறந்து கி.பி 1975 –ம் ஆண்டு தனது நண்பர் திரு.பால் ஆலனுடன் சேர்ந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தை தொடங்கினார்.
கி.பி 1980 –ம் ஆண்டு IBM நிறுவனம் மெயின்பிரேம் கணினி வடிவமைப்பிலிருந்து மேசைக்கணினிகளை வடிவமைக்க முனைந்தது.அப்போது அவர்களுக்கு இந்த கணினியில் இயங்ககூடிய இயக்குதளம் தேவைப்பட்டது.அந்த நேரத்தில் பில்கேட்ஸ் டாஸ்(DOS) என்ற இயக்குதளத்தை வடிவமைத்து பங்கு முறையில் விற்றார்.அன்று தொடங்கிய அவரது வருமானம் ,இன்று அவரை உலகின் மிகப்பெரிய பணக்காராக உயர்த்தியுள்ளது.
டாஸ்-க்கு பிறகு 1985-ம் ஆண்டு விண்டோசின் முதல் பதிப்பை மைக்ரோஃசாப்ட் நிறுவனம் வெளியிட்டது.இதில் கிராஃபிக்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டது.இதனால் இது பயனர்களுக்கு டாஸை விட எளிதில் புரியக்கூடியதாகவும் இருந்தது.1990-ம் ஆண்டு வெளியிடப்பட்ட விண்டோஸ் மூன்றாம் பதிப்பு (Windows 3.0) கிட்டதட்ட மூன்று மில்லியன் காப்பிகள் விற்று விற்பனையில் சாதனை படைத்தது.அதன் பின் விண்டோஸ் 95,98,Me,2000,XP, இப்போது விஸ்டா என்று தனக்கென தனிவழி போட்டுக்கொண்டு வெற்றி பாதையில் மைக்ரோஃசாப்ட் நிறுவனத்தை நடத்திவருகிறார்.
மைக்ரோஃசாப்ட் நிறுவனம் இயக்குதளம் மட்டுமல்லாமல் Exchange server, MS Office,Visio,Visual Basic,VB Dotnet போன்று பல பயன்பாட்டு மென்பொருள்களையும் வடிவமைத்து வெளியிடுகிறது.

பில்கேட்ஸ் தனது பணிகளிலிருந்து மட்டுமே ஓய்வு பெறுகிறார்.மைக்ரோஃசாப்ட் நிறுவனத்தின் பங்குகளை அதிகம் பெற்றிருப்பதால்,தொடர்ந்து நிறுவனத்தின் தலைவராக இருப்பார்.
பில்கேட்ஸ் சமூக சேவையில் அதிக ஈடுபாட்டின் காரணமாக “பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை” (B&MGF) என்ற அறகட்டளையை துவக்கி கொடிய நோய்களான எய்ட்ஸ் மற்றும் கேன்சர் ஆகியவற்றை தடுக்க உலகம் முழுவதும் உள்ள அமைப்புகளுக்கு உதவி வருகிறார்.
தனது பிரிவு உபசார விழாவில் பேசிய பில்கேட்ஸ் “சமூக சேவையில் ஈடுபட்டு, ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்வதே என்னுடைய நோக்கம்” என்று கூறினார்.

Monday, June 30, 2008

மணி மேனேஜர் 0.8.0.2



மணி மேனேஜர் Ex என்பது தனிநபர் பண மேலாண்மைக்காக உலக அளவில் அதிகமாக பயன்படுத்தப்படும் ஒரு கட்டற்ற திறமூல மென்பொருள் ஆகும்.
தனிநபர் வரவு/செலவு கணக்குகளை சரிபார்க்க உதவும் மென்பொருள்.
நமது பணம் எப்படியெல்லாம் செலவிடப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளவும் தேவையற்ற செலவுகளை குறைக்கவும் பணத்தை பயனுள்ள வழியில் செலவு செய்ய திட்டமிடவும் இந்த மென்பொருள் உதவுகிறது.
தமிழ் மொழியில் பயன்படுத்தும் வகையில் தமிழ் மொழி தெரிவும் சேர்க்கப்பட்டுள்ளது.

மணி மேனேஜர்
நன்றி:http://thamizha.com

Friday, June 13, 2008

நிலைவட்டு எவ்வாறு இயங்குகிறது?

கணினியில் சில கருவிகளை மிகவும் கவனமாக கையாள வேண்டும் என்பர்,அதில் முக்கியமானது நிலைவட்டு (Hard Disk).ஆனால் இந்த வீடியோவில் யாரும் அதிகம் பார்த்திடாத ஒரு காட்சியை பார்க்கலாம்.ஒரு நிலை வட்டை திறந்து அது எவ்வாறு இயங்குகிறது என்று விளக்கியுள்ளனர்.

Friday, May 30, 2008

தமிழ்நாடு அரசு பாடபுத்தகங்கள்

ஒன்றாம் வகுப்பிலிருந்து மேல்நிலை இரண்டாம் ஆண்டு (+2) வரை உள்ள அனைத்து வகுப்பிற்கும் தேவையான தமிழ்நாடு அரசு பாடபுத்தகங்களை கிழ்கண்ட இணைப்பிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்...
பாடபுத்தகங்கள்
http://www.textbook sonline.tn. nic.in/

Wednesday, May 7, 2008

இலவச மின்புத்தகங்கள்

உலகின் புகழ்பெற்ற பல்கலைகழகங்களின் நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை கிழ்கண்ட இணைப்புகள் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்

Computer Science & Programming (31)

கணினி அறிவியல் மற்றும் நிரலாக்கம்

1. Introductoy Progamming [University of Washington] 2. Understanding Computers and the Internet [Harvard University] 3. Computer System Engineering 4. Freshman Computer Science Seminar 5. Data Structures 6. Graduate Computer Architecture 7. Introduction to Algorithms 8. Introduction to Computers 9. Machine Structures 10. Computer Language Engineering 11. Data Structures, Algorithms and Applications in Java 12. Introduction to Copy Right Law 13. Operating Systems and Systems Programming [OS] 14. XML foundations 15. Programming Languages 16. Introduction to Symbolic Programming 17. Vision Algorithms 18. Data Management System Design 19. Computer System Analysis 20. Object oriented programming with Java 21. Relational Database Management Systems [RDBMS] 22. Introduction to Programming 23. C Programming 24. Programming in C++ 25. C++ for Particle Physicists 26. programming with JAVA 27. JAVA, Advanced JAVA 28. ASP.NET AJAX and 2.0 29. SQL Server 2005 30. Python, Java, Ruby, Linux, Graphics, Blender etc… 31. MSVC Debugger Tutorial

Electronics (17)

மின்னணுவியல்

32. Solid State Devices 33. Circuits and Electronics 34. Digital Integrated Circuits 35. Electricity and Magnetism 36. Electromagnetic Fields, Forces and Motion 37. Integrated Circuits for Communications 38. Introductions to MEMS Design 39. Linear Integrated Circuits 40. Introduction to Microelectronic Circuits 41. Microelectronic Devices and Circuits 42. Advanced Analog Integrated Circuits 43. Advanced Digital Integrated Circuits 44. Analysis and Design of VLSI Analog Digital Interface Integrated Circuits 45. CMOS Analog IC Design [Boise State University] 46. CMOS Mixed-Signal IC Design [Boise State University] 47. Advanced Analog IC Design [Boise State University] 48. Physics of Microfabrication: Front End Processing
Signals & Systems, Communication systems (6)

தகவல் தொலைதொடர்பு

49. Digital Image Processing [DIP] 50. Digital Signal Processing [DSP] 51. Electromagnetics and Applications 52. Principles of Digital Communication II 53. Structure and Interpretation of Systems and Signals 54. MATLAB Tutorial Movies
Computer Networking (13) 55. Introduction to Computer Networking 56. Computer Communication Networking 57. Wireless and Mobile Networking 58. Internet Protocols [IP] 59. Broadband and Optical Networks 60. Wireless, Wi-Fi, VOIP and Many more 61. Introduction to Network Communications [Audio only] 62. Cisco Certified Networking Associate [ Audio only] 63. Local Area Networking [LAN] [ Audio only] 64. Integrated Communication Networking [Audio only] 65. Communications Hardware [Audio only] 66. Network Interface Design [Audio only] 67. Internetworking and Higher Layer Protocol [Audio only]


Mathematics (20)

கணிதவியல்

68. Linear Algebra 69. Differential Equations 70. Introduction to Statistics 71. Mathematical Methods for Engineers I 72. Mathematical Methods for Engineers II 73. Mathematics of Finance 74. Fundamentals of Algebra 75. Applied Probability 76. Discrete Mathematics 77. Calculus-I Key Concepts 78. Limits, Differential Equations and Applications 79. Mathematical video lectures [All Topics] 80. Brief review of Elementary Algebra 81. Mathematical Problems II 82. Statistics and Numerical Methods in HEP 83. Applied parallel Computing 84. Finite Mathematics 85. Integration and Infinite Series 86. Single-variable Calculus 87. Dovermann's Derive Videos
Physics (17) 88. Introductory Physics [University of California] 89. Physics I: Classical Mechanics 90. Physics II: Electricity and Magnetism 91. Physics III: Vibrations and Waves 92. Physics for Future Presidents 93. Descriptive Introduction to Physics 94. Exploring BlackHoles: General Relativity & Astrophysics 95. Electromagnetic Fields, Forces and Motion 96. Introduction To Mathematical Physics [Audio podcast] 97. Geometric Optics 98. Modern Physics [Prof Sharma's] 99. Lectures on Quantum Physics 100. Physics of Microfabrication: Front End Processing 101. The Wonders of Physics 102. Physics - How Things Work 103. String Theory 104. Quantum Mechanics for Nanoscience and Nanotechnology


Chemistry ( 9 )

வேதியியல்

105. Introduction to Chemistry 106. Introduction to Solid State Chemistry 107. Principles of Chemical Science 108. Chemical Structure and Reactivity 109. Organic Chemistry 110. Astrophysical Chemistry [NOVA] 111. Organic Chemistry [Hoverford college] 112. Organic Chemistry II [University Regensburg] 113. Imperial college chemistry
Anatomy & Physiology (4)

உடல்கூறுவியல்

114. General Human Anatomy 115. Comparative Physiology 116. Human Anatomy & Physiology 117. Anatomy and Physiology [California State University]

For more and recent courses visit http://freevideolectures.com/

Wednesday, March 19, 2008

விஸ்டா SP-1

மைக்ரோசாப்ட் நிறுவனம் இன்று விஸ்டா இயக்குதளத்திற்கான முதல் சர்விஸ் பேக்-கை வெளியிட்டுள்ளது.
பதிவிறக்கம் செய்ய
http://www.microsoft.com/downloads/details.aspx?FamilyID=b0c7136d-5ebb-413b-89c9-cb3d06d12674&displaylang=en

Wednesday, March 12, 2008

அன்றும் இன்றும்-1

தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியைத்தான் இங்கு பார்க்கமுடிகிறது.

ஆம் 20 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தப்பட்ட 1 GB ஹார்ட் டிரைவும் இப்போது உள்ள 1 GB மெமரி கார்டும்..





Tuesday, March 11, 2008

மைக்ரோபிராசசர் (நுண்செயலி)


மைக்ரோபிராசசர் (நுண்செயலி)
நம்மிடம் உள்ள கணினியைப்பற்றி பிறரிடம் சொல்லும்போது எப்படி சொல்வோம்.என்னிடம் பெண்டியம் 3 ,பெண்டியம் 4 அல்லது செலிரான் கணினி உள்ளது என்று சொல்வோம்.இதிலிருந்து என்ன தெரிகிறது?ஒரு கணினி பெரும்பாலும் அதன் நுண்செயலியை மையமாக வைத்தே கூறப்படுகிறது.

இதை கணினியின் "மூளை" என்றழைக்கப்படுகிறது.நுண்செயலி என்பது ஒரே சில்லுக்குள் உள்ள கட்டுப்பாட்டு இயக்கமையமாகும்(CPU).ஒரு கணினியின் கட்டமைப்பு இதனை பொறுத்தே மாறுபடுகிறது.

கனினியில் உள்ள ஒவ்வொரு வன்பொருளும் சிறந்த முறையில் இயங்க கட்டளை சிக்னலை ஏற்படுத்திக் கட்டுப்படுத்துகிறது.நம் கணினியில் கொடுக்கப்படும் செயல்கள் பல நுண்செயல்களாக உடைக்கப்பட்டு இயக்கப்படுவதால் இதை நுண்செயலி என்று கூறுகிறோம்.

நுண்செயலி எவ்வாறு வடிவமைக்கபடுகிறது
சென்ற நூற்றாண்டின் மிக முக்கியமான கண்டுபிடிப்புகளில் கணினியின் நுண்செயலியும் ஒன்று.இதனால் இன்று மாபெரும் மிண்ணணு புரட்சி ஏற்பட்டுள்ளது.இன்று உலகத்தையே ஒரு கணினிக்குள் சுருக்கிவிட்டோம்.

நுண்செயலியை வடிவமைக்கப் பயன்படும் உலோகம் க்வார்ட்ஸ் என்னும் கண்ணாடி ஸ்படிகம் ஆகும்.
இதை நன்றாக சுத்தம் செய்து க்வார்ட்ஸ் சிலிக்கானாக மாற்றுகின்றனர்.
அதன் பிறகு மெல்லிய சிலிக்கன் தகட்டில் இணைப்புகள் வரையப்படுகிறது.
முதன் முதலில் வடிவமைக்கப்பட்ட 4004 நுண்செயலியில் 2300 டிரான்சிஸ்டர்களை வரைந்தனர்.ஆனால் இப்போது பெண்டியம் 4 நுண்செயலியில் 5.5 கோடிக்கும் அதிகமான டிரான்சிஸ்டர்களை வரைந்துள்ளனர்.இவ்வளவு டிரான்சிஸ்டர்களையும் கால் அங்குல சதுர சிலிக்கன் தகட்டில் வரைந்துள்ளனர்.இதை வடிவமைப்பது அவ்வளவு சுலபமல்ல
டிரான்சிஸ்டரை வரைகின்றனர் என்றவுடன் முழு என்று என்ன வேண்டாம்.சிலிக்கனின் மேல் ஃபோட்டோ ரெசிஸ்ட் மூலம் மின்கடத்தும் பொருள்,மின்கடத்தாப்பொருள் மற்றும் குறைகடத்தி ஆகியவற்றைச் சேர்த்து வடிவமைக்கின்றனர்.இது ஒரு டிரான்சிஸ்டர் போல் வேளை செய்வதால் இதை டிரான்சிஸ்டர் டிரான்சிஸ்டர் என்கிறோம்.இவ்வாறு சில்லில் மிக சிக்கலான இணைப்புகளை வரையும் முறையை "ஃபோட்டோ லித்தோகிராபி" முறை என்கிறோம்.வரையப்பட்ட இணைப்புகளில் மெல்லிய கோடுகளின் அகலம் "மைக்ரான்" என்னும் அலகால் அளக்கப்படுகிறது.

ஒரு மைக்ரான் என்பது ஒரு மீட்டரில் 10 லட்சத்தில் ஒரு பாகம் இன்னும் எளிதாக சொல்ல வேண்டுமெனில் நமது தலைமுடியின் தடிமனில் எழுபதில் ஒரு பாகம்.

நுண்செயலியை கண்டுபிடித்தவர்
1969-ல் Busicom என்ற ஜப்பானிய நிறுவனம் கால்குலேட்டருக்குத் தேவையான சர்க்யூட் உருவாக்கிதர இண்டெல் நிறுவனத்தை நாடியது.

இண்டெல் நிறுவனம் அதற்கான முயற்சியில் ஈடுபட்டது.அப்போது இண்டெல் நிறுவன பொறியாளர் மெர்சியன் டெட் ஹாஃப்(Mercian E.Ted haff) கால்குலேட்டருக்குத் தேவையான பல சர்க்யூட்களை ஒரே சில்லுக்குள் வடிவமைத்து உலகின் முதல் நுண்செயலியை வடிவமைத்தார்.

நுண்செயலிகளில் பலவகைகள்
1. X86 வகை நுண்செயலிகள்
2. 64 bit வகை நுண்செயலிகள்
3. RISC வகை நுண்செயலிகள்

லினக்சில் பூட்லோடரை மாற்றுதல்

GRUB லிருந்து LILO மாற்ற
எனக்கு GRUB வேண்டாம் LILO பூட் லோடரே வேண்டும் என்றால் கீழ்கண்ட கட்டளையை தட்டச்சு செய்யவும்

# cp /etc/lilo.conf.anaconda /etc/lilo.conf
# lilo -v
# lilo -t


லைலோ ஏற்கனவே கணினியில் நிறுவப்படவில்லையென்றால் அதற்கான மென்பொருளை இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளவும்

LILO லிருந்து GRUB மாற்ற

# grub-install /dev/hda

என்ற கட்டளையை தட்டச்சு செய்து இயக்கவும்.இதில் /dev/hda என்பதில் உங்கள் கணினியில் என்ன ஹார்ட்டிரைவ் உள்ளதோ அதற்கான அடைவு பாதையை கொடுக்கவும்.ஒருவேளை மென்பொருள் உங்கள் கனினியில் இல்லையென்றால் என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.

Saturday, February 23, 2008

விண்டோஸ் Keyboard Shortcuts

Windows Logo ==Start menu -வை திறக்க அல்லது மறைக்க
Windows Logo+BREAK ==System Properties dialog box யை திறக்க
Windows Logo+D ==உடனடியாக மேல்மேசையை காட்ட
Windows Logo+M ==எல்லா சாளரங்களையும் சுருக்க
Windows Logo+SHIFT+M ==சுருக்கப்பட்ட சாளரங்களை திறக்க
Windows Logo+E ==My Computer-யை திறக்க
Windows Logo+F ==கோப்பு மற்றும் அடைவுகளை தேட
CTRL+Windows Logo+F ==நெட்வொர்க் கணினிகளை தேட
Windows Logo+F1 ==விண்டோஸ் உதவிக்கு
Windows Logo+ L ==கணினியை பூட்ட
Windows Logo+R ==Run dialog box-யை திறக்க
Windows Logo+U ==Utility Manager-யை திறக்க

F1 key ==உதவியை பெற
F2 key ==பெயர்மாற்றம் செய்ய
F3 key ==கோப்பு மற்றும் அடைவுகளை தேட
F4 key ==Address bar-க்கு செல்ல
F5 key ==புதுப்பித்தல்(Refresh)

Friday, February 22, 2008

விண்டோஸ் விஸ்டா -நிறுவுதல்

விண்டோஸ் விஸ்டாவை எவ்வாறு நிறுவுவது என்று எளிதாக விளக்கும் வீடியோ படம்



Monday, February 18, 2008

லினக்ஸ் வரலாறு


1971-ம் ஆண்டு நவம்பர் 3-ம் நாள் யுனிக்ஸ் முதல் பதிப்பு வெளியிடப்பட்டது.இந்த யுனிக்சை வடிவமைத்தவர்கள் பெல் நிறுவனத்தில் பணியாற்றிய கென் தாம்சன் மற்றும் டென்னிஸ் ரிட்ச்சி என்ற இரு வல்லுனர்கள்.இதில் சுமார் 60 கட்டளைகள் இருந்தன. பிறகு யுனிக்ஸ் கொஞ்ச கொஞ்சமாக மாற்றம் செய்யப்பட்டு அதன் அடுத்தக்கட்ட பதிப்புகள் வெளிவர தொடங்கின.பல பெரிய நிறுவனகள் யுனிக்ஸ் இயக்குதளத்தை தங்களுக்கு ஏற்றவாறு சில மாற்றங்கள் செய்து பயன்படுத்தினர்.இதனால் யுனிக்ஸ் இயக்குதளத்தை அடிப்படையாக கொண்டு பல இயக்கதலங்கள் வெளிவந்தன.(எ.கா)

இயக்கத்தளம் -> நிறுவனம்
BSD Unix ->BSD

AIX -> IBM

Solaris -> Sun Microsystems

IRIX -> SGI

HP-UX -> HP

SCO-Unix -> SCO

System V -> AT & T

Xenix -> Microsoft
இவைதவிர MINIX,QNX,DUNIX,ULTRIX மற்றும் Uniware என பல இயக்குதளங்கள் வெளிவந்தன.யுனிக்ஸ் ஏழாவது பதிப்பு வெளியிடப்பட்டது.அப்போது அதன் மூலகோடுகள் மாணவர்களுக்கு சென்றடையாதவண்ணம் இருந்தது.அதாவது பெரிய மென்பொருள் வல்லுனர்கள் மற்றும் பேராசிரியர்கள் மட்டுமே தெரிந்துவைத்திருந்தனர்.

ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த திரு.ஆன்று டேநென்பாம்(Andrew tenbawm) என்பவர் யுனிக்ஸ் மூலகோடுகளை சுருக்கி அப்போதிருந்த கணினிகளில் இயங்குமாறு மினிக்ஸ் என்ர இயக்குதளத்தை வடிவமைத்தார்.அதுமட்டுமல்லாமல் இந்த மினிக்ஸ் மூலகோடுகளை எவ்வாறு வடிவமைப்பது என்பதை பற்றியும் ஒரு புத்தகம் வெளியிட்டார்.இது கணினித்துறையில் சாதனை படைக்க காத்திருந்த பல மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

1991-ம் ஆண்டு ஹெல்சின்கி பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு கணினி அறிவியல் படித்துக்கொண்டிருந்த லினஸ் டோர்வல்ட் மினிக்ஸ் மூலகோடுகளை தீவிரமாக பயின்று வந்தார்.அதற்கு டேநென்பாம் எழுதிய புத்தகமே சிறந்த வழிகாட்டியாக இருந்தது.

அதே ஆண்டு தானே மினிக்ஸ் மூலகோடுகளை சற்று மாற்றி தனது கணினியில் இயங்குமாறு இயக்குதளத்தை வடிவமைத்தார்.இந்த சிறிய இயக்குதளத்தை தனது நண்பர்களிடம் இயக்கி காண்பித்தார்.அப்போது அவரது நண்பர் திரு.அரிலேமக் தனது நெட்வொர்க் சர்வரில் லினசின் இயக்குதளத்தை சேமிக்க ஒரு பகுதியை கொடுத்தார்.

லினக்ஸ் பெயர் வரக்காரணம்

லினஸ் தனது இயக்கதளத்தை நண்பரின் சர்வரில் லினக்ஸ் என்ற அடைவில் சேமித்துவைத்தார்.லினஸ் தான் வடிவமைத்த இந்த அடைவிலிருந்து பதிவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளலாம் அல்லது அதன் மூலகோடுகளை தங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ளலாம் என்று தனது நண்பர்கள் அனைவருக்கும் மின்னஞ்சல் அனுப்பினார்.பார்க்க

**************************************************************

On August 25, 1991, he announced his initial creation on the MINIX newsgroup comp.os.minix as follows:
Message-ID: 1991Aug25.205708.9541@klaava.helsinki.fi

From: torvalds@klaava.helsinki.fi (Linus Benedict Torvalds)

To: Newsgroups: comp.os.minix

Subject: What would you like to see most in minix? Summary: small poll for my new operating system
Hello everybody out there using minix-
I'm doing a (free) operating system (just a hobby, won't be big and professional like gnu) for 386 (486) AT clones. This has been brewing since april, and is starting to get ready. I'd like any feedback on things people like/dislike in minix, as my OS resembles it somewhat (same physical layout of the file-sytem due to practical reasons)among other things.
I've currently ported bash (1.08) an gcc (1.40), and things seem to work. This implies that i'll get something practical within a few months, and I'd like to know what features most people want.

Any suggestions are welcome, but I won't promise I'll implement them :-)
Linus Torvalds torvalds@kruuna.helsinki.fi

****************************************************************

பலரும் இந்த அடைவிலிருந்து பதிவிறக்கம் செய்ததால் இதற்கு லினக்ஸ் என்று பெயர் வந்தது.அன்று முதல் உலகில் உள்ள பலரும் லினக்ஸ்-ல் உள்ள குறைகளை களைந்து சிறந்த சக்திவாய்ந்த இயக்க சூழலாக மாற்றிவருகின்றனர்.

Saturday, February 16, 2008

கணினி ஒருங்கிணைப்பு

ஒரு புதிய கணினியை எவ்வாறு ஒருங்கிணைப்பது(Assembling)என்று எளிதாக விளக்கும் வீடியோ படம்



Play பொத்தானை அழுத்தவும்

லினக்ஸ் பூட்லோடர்

நாம் ஒவ்வொரு முறை கணினியை ஆன் செய்யும் போதும் இயக்குதளம் (ஆப்பரேட்டிங் சிஸ்டம்) ஹார்ட்டிரைவிலிருந்து முதன்மை நினைவகத்திற்கு(RAM) ஏற்றப்படும்.இந்த செயலை நாம் "பூட்டிங்"(booting) என்கிறோம்.இந்த பூட்டிங் செயலை பூட்லோடர் என்னும் சிறிய ப்ரோக்ராம் செயல் படுத்துகிறது.இதனால் இதை பூட்லோடர் என்பர்.இது ஹார்ட்டிரைவின் முதல் செக்டாரில் சேமிக்கப்படுகிறது.

ரெட்ஹேட் லினக்ஸ் 7.2 பதிப்பு முதல் இரண்டு வகையான பூட்லோடர்களை ஆதரிக்கிறது.
1.லைலோ (LILO)
2.கிரப் ( GRUB )

இதில் லைலோ என்பது பழமையானது.இது லினக்ஸ் தொடக்கத்திலிருந்து வரும் பூட்லோடர் ஆகும்.தற்போதுள்ள லினக்ஸ்(ரெட்ஹேட் லினக்ஸ் 7.2 பதிப்பு முதல் ) அனைத்தும் கிரப் பூட்லோடரையும் ஆதரிக்கிறது.
முதலில் பூட்லோடர் என்றால் என்ன என்று பார்ப்போம்

கிரப் பூட்லோடர்
கிரப் பூட்லோடர் லைலோ பூட்லோடரை விட பல சிறப்புகளை கொண்டது
1.பல வகையான ஃபைல் சிஸ்டமை ஆதரிக்கும்.
2.பூட் இமேஜை நெட்வொர்க்கிலிருந்து பதிவிறக்கும் (download) திறனுடையது.
3.பல வகையான இயங்குதளங்களை ஆதரிக்கும் திறனுடையது.
4.லைலோ-வை விட மிகவும் பாதுக்காப்பானது.


GRUB என்பது GRand Unified Boot Loader என்பதன் சுருக்கமாகும்.இந்த கிரப் பூட்லோடரை பற்றி நிறைய தகவல் வேண்டுமென்றால் man grub அல்லது info grub என்ற கட்டளையை லினக்ஸ் கணினியில் கொடுத்து பார்த்துக்கொள்ளவும்.

Friday, February 15, 2008

ஓப்பன் ஆபிஸ் சொல் அகராதி

எழுத்தாளர் திரு.சுஜாதா அவர்கள் மொழிபெயர்த்த ஓப்பன் ஆபிஸ் சொல் அகராதியை காண இங்கே க்ளிக்குக

Tamil PC
(ஆங்கிலத்திலிருந்து தமிழ்)

Thursday, February 14, 2008

விண்டோஸ் விஸ்டா

மைக்ரோசாப்ட் நிறுவனம் மேல்மேசை கணினிகளுக்காக தமது புதிய விண்டோஸ் வெளியிடான விஸ்டா-யை பல பதிப்புகளில் வெளியிட்டுள்ளது அவை
  1. Microsoft windows Vista -Home Basic
  2. Microsoft windows Vista -Home Premium
  3. Microsoft windows Vista -Business
  4. Microsoft windows Vista -Ultimate
விஸ்டா நிறுவ தேவைப்படும் குறைந்தபட்ச வன்பொருள்கள்
நுண்செயலி -800MHz
வன்தகடு -20 GB
நினைவகம் -512MB
ஆனால் மைக்ரோசாப்ட் கிழ்கண்ட வன்பொருள்கள் இருந்தால் சிறந்தது என்கிறார்கள்
நுண்செயலி -1GHz
வன்தகடு -20 GB
நினைவகம் -512MB அல்லது 1GB


விஸ்டா பற்றி மேலும் விவரங்கள் பெற

http://www.microsoft.com/windows/products/windowsvista/default.mspx

விண்டோஸ் XP-Tips2

விண்டோஸ் 2000 மற்றும் XP நிறுவியுள்ள கணினியில் FAT32 பகிர்வுகளை தகவல் இழப்பின்றி எவ்வாறு NTFS பகிர்வாக மாற்றுவது?

(எ.கா)உங்கள் கணினியில் உள்ள D:\ என்ற FAT32 பகிர்வை NTFS பகிர்வாக மாற்ற
start->Run சென்று cmd என்று தட்டச்சு செய்து OK கொடுக்கவும்.பிறகு வரும் கமாண்ட் ப்ராம்ப்ட்-ல் கிழ்காணும் கட்டளையை டைப் செய்யவும்
convert d:/fs:ntfs

Wednesday, February 13, 2008

விண்டோஸ்XP Tips-1

விண்டோஸ் XP-ல் உங்கள் கணினியை பற்றி முழு தகவலை உடனடியாக பெற....
Strat-> Run-> cmd சென்று
systeminfo என்று தட்டச்சு செய்து "என்டர்" செய்யவும்.

செல்பேசிகளுக்கான இலவச தமிழ் நூல்கள்

சென்ற மாதம் நான் LG KG 300 என்ற செல்பேசியை வாங்கினேன்.அதை பற்றிய எனது விமர்சனம்
<<
LG Dynamite KG 300>>

செல்பேசிகளுக்கான் இலவச தமிழ் நூல்கள்
உங்கள் செல்பேசி JAVA .-இ ஆதரிக்குமென்றால் திருக்குறள்,புறநானூறு,அகநானூறு,ஆத்திச்சூடி போன்ற தமிழ் நூல்கள் உங்கள் செல்பேசியிலே படிக்க்முடியும்.
இந்த கோப்புகள் JAR பதிப்பில் இருக்கும்.ஆனால் உங்கள் செல்பேசி JAVA-யை ஆதரிக்கவேண்டும்.
இவற்றை உங்கள் செல்பேசிக்கு பதிவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளலாம்.
நூற்றுக்கு மேற்பட்ட நூல்கள் இங்கு உள்ளது
செல்பேசி தமிழ் நூல்களை பெற கீழ்கண்ட இணைய இணைப்பிற்கு செல்லவும்
<<
செல்பேசி தமிழ் நூல்கள்>>

Friday, February 8, 2008

ஆப்பிள்-ன் i-Phone

i-pod என்னும் கையக டிஜிட்டல் இசைக் இயக்கியை வெளியிட்டு டிஜிட்டல் உலகில் புரட்சி செய்த ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் i-Phone என்ற புதிய மொபைல் ஃபோனை வெளியிட்டு ஒரு புதிய புரட்சியை படக்க திட்டமிட்டுள்ளது.


இந்த i-Phone ஆனது செல்பேசி,அகலத்திரை அய்-பாட்(i-pod) மற்றும் இணைய தொடர்பு என ஒரு கணினிக்கு நிகரான அத்துனை சிறப்புகளையும் கொண்டு வெளிவ்ந்துள்ளது.பார்த்தவுடனே வாங்கத்தூண்டும் வண்ணமயமான வடிவம் மற்றும் தொடுதிரை இதன் சிறப்புகளாகும்.


மேலும் விவரங்களுக்கு......
http://www.apple.com/iphone/phone/

Tuesday, February 5, 2008

கணினி ஒர் அறிமுகம்.

ஒரு கணினியை பொதுவாக பார்த்தால் நமக்கு தெரிவது கீழ்கண்ட பாகங்கள் ஆகும்.


* சிஸ்டம் பெட்டி
* மானிட்டர்
* விசைப்பலகை
* மெளஸ்

சிஸ்டம் பெட்டி:
கணினியின் செயல்பாடுகள் அனைத்தும் இதனுள் உள்ள வன்பொருள்களால் செயல்படுத்தப்படுகின்றன.
(எ.கா) மதர்போர்ட்,SMPS,ஹார்ட்ட்ரைவ்,சிடி டிரைவ்,மற்றும் பல

உள்ளீடு சாதனங்கள்:
இதன் செயல்பாட்டுக்கு தேவையான உள்ளீடு தகவலை கொடுப்பதற்கு உள்ளீடு சாதனங்கள் தேவைப்படுகின்றன.
(எ.கா) விசைப்பலகை,மெளஸ்,மைக்,ஜாய்ஸ்டிக் மற்றும் பல

வெளியீடு சாதனங்கள்:
ஒரு செயல்பாட்டை முடித்தப்பிறகு அதன் வெளியீடு தகவலை நமக்கு தெரிவிப்பதற்கு வெளியீடு சாதனங்கள் தேவைப்படுகின்றன.
(எ.கா) மானிட்டர்,ஒலிபெருக்கி மற்றும் பல

கேயுபுண்டு நிறுவும் முறை..

கேயுபுண்டு கே பணிச்சூழலை அடிப்படையாகக் கொண்ட, உபுண்டு நிறுவனத்தால் ஊக்குவிக்கப் படும் இயங்கு தளம். 256 MB நினைவாற்றல் கொண்ட கணினி பரிந்துரைக்கப் படுகிறது.


கேயுபுண்டுவை பதிவிறக்க: http://kubuntu.com/download.php



கேயுபுண்டு நிறுவும் முறை..இங்கே க்ளிக்குக

Monday, February 4, 2008

இலவசமாக வீடுதேடி வரும் உபுண்டு லினக்ஸ்

உபுண்டு லினக்சை பெற இங்கே க்ளிக் செய்யவும்






இங்கு பதிவு செய்த சில வாரங்களில் உங்கள் வீடுதேடி இலவசமாக உபுண்டு லினக்ஸ் வரும்