Saturday, July 26, 2008

தெரியுமா உங்களுக்கு?( நிறுவியவர்கள்)

1.கணினியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
சார்லஸ் பாபேஜ்

2.இண்டெல் நிறுவனத்தை நிறுவியவர்கள்.
ராபர்ட் நாய்ஸ் மற்றும் கார்ல்ன்மூர்.

3.மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை நிறுவியவர்கள்.
பில்கேட்ஸ் மற்றும் பால் ஆலன்.

4.ஆப்பிள் நிறுவனத்தை நிறுவியவர்கள்
ஸ்டீவ்ஜாப்ஸ் மற்றும் ஸ்டீவ் ஓஸ்னிக்

5. ஐபிஎம் (IBM) நிறுவனத்தை நிறுவியவர்கள்
ஹெர்மன் ஹோலரித் மற்றும் ஜேக்கர்ட்(1911)

6.இலவச மென்பொருள் கழகத்தை நிறுவியவர்

ரிச்சர்ட் ஸ்டால்மேன்

7.சன் மைக்ரோசிஸ்டம் நிறுவனத்தை நிறுவியவர்கள்
வினோத் கோசலா ,ஸ்காட் மேகன்லே ,பில் ஜாய் மற்றும் ஆண்டி பெக்டோல்சிம்


8.எஎம் டி (AMD) நிறுவனத்தை நிறுவியவர்கள்
ஜெர்ரி சாண்டர்ஸ் ,eட்டர்னி மற்றும் சிலர்

தெரியுமா உங்களுக்கு? (கண்டுபிடித்தவர்கள்)

1.ட்ரான்சிஸ்டரை கண்டுபிடித்தவர்கள்
ஜான்பர்டீன்,வில்லியம் சாக்லி மற்றும் வால்டர்ப்ரேட்டேன்

2.நுன்செயலியை(மைக்ரோபிராசசர்) கண்டுபிடித்தவர்கள்
டெட் ஹாஃப்(1971 –இண்டெல்)

3.குறைமின்கடத்தியை கண்டுபிடித்தவர்
இராபர்ட் நாய்ஸ்(1968)

4.இண்டக்ரல் சர்க்யூட் என்னும் ஐசி–யை கண்டுபிடித்தவர்
கில்பி

5.எலக்ட்ரானை கண்டுபிடித்தவர்
ஜே.ஜே.தாம்சன்

6.நியூட்ரானை கண்டுபிடித்தவர்
சாட்விக்

7.முதல் மெளசை வடிவமைத்தவர்
டக்ளஸ் எங்கால்பர்ட்(Douglas Engelbart)

8.முதல் லேசர் கதிரை கண்டுபிடித்தவர்
தியோடர் ஹெரால்ட்மெய்மன்(1960)

9. CRT-யை கண்டுபிடித்தவர்
ஃபெர்டினந்த் பிரான்(1987)

10.TCP நெரிமுறையை உருவாக்கியவர்
விண்ட்செர்ஃப்,ஸ்டிவ் கிராக்கர் மற்றும் டோனி ஹோகன்(1978)

11.முதல் டிஜிட்டல்கணினியை வடிவமைத்தவர்
ஹோவர்ட் ஐய்க்கன்(1944)

12. C -மொழியை உருவாக்கியவர்கள்
டென்னிஸ் ரிட்சி மற்றும் கென் தாம்ஸன்

13.லினக்சை உருவாக்கியவர்
லினஸ் டோர்வால்ட்

தெரியுமா உங்களுக்கு?

1. ஒரு இணைய ஆண்டுக்கு 55 நாட்கள்

2. கணினியின் மூளை என்றழைக்கப்படுவது?
நுண்செயலி

3. CD மற்றும் DVD களின் விட்டம்
120 மி.மீ

4. CD டிரைவில் X என்பது 150 தகவல் பறிமாற்ற வேகத்தை குறிக்கிறது

5. கணினியில் உள்ள SMPS மாறுதிசை(AC) மின்னோட்டத்தை நேர்திசை(DC) மின்னோட்டமாக மாற்றுகிறது

6. CD-ல் தகவல்கள் மேடு பள்ளமாக சுருள் வடிவில் சேமிக்கப்படுகிறது

7. CD டிரைவில் தகவல்கள் லேசர் கதிரை பயன்படுத்தி படிக்கப்படுகிறது

8. உலகின் முதல் டிஜிட்டல் கணினியின் நீளம் 51 அடி அகலம் 8 அடி.

9. ஸ்டேடிக் ராம் நினைவகங்கள் பிஃளிப்-ப்ளாப்(Flip flop) கொண்டு வடிவமைக்கப்படுகிறது.

10. டைனமிக் ராம் நினைவகங்கள் கெப்பாசிட்டர் கொண்டு வடிவமைக்கப்படுகிறது.

11. உலகின் முதல் நுண்னியக்கியான் 4004 –ல் உள்ளிணைக்கப்பட்ட டிரான்சிஸ்டர்களின் எண்ணிக்கை சுமார் 2300

12. முதல் தலைமுறை கணினிகள் வால்வுகள் கொண்டு வடிவமைக்கப்பட்டன.

13.USB -2 –ன் தகவல் பறிமாற்ற வேகம் வினாடிக்கு 460 மெகா பைட் ஆகும்.

14. லேசர் ப்ரிண்டரில் தகவல்களை அச்சடிக்க டோனர்(toner) என்னும் உலாகப்பொடி பயன்படுத்தப்படுகிறது.

Tuesday, July 22, 2008

கணினி முன் எவ்வாறு அமர வேண்டும்


கணினி முன் அமரும் போது கவனிக்க வேண்டியது

Monday, July 14, 2008

தகவல் தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படும் அலகுகள்(Units)

தகவல் கொள்ளளவு அலகு:
ஒரு கணினியின் தகவல் கொள்ளளவை கீழ்கண்ட அலகுகளில் அளவிடுகின்றனர்.
இது பெரும்பாலும் நினைவகம்(RAM),வட்டு(Disk) கொள்ளளவை அளவிட பயன்படுகிறது.
(எ.கா)
ஹார்ட் டிரைவ் கொள்ளளவு 40ஜிபி
CD கொள்ளளவு 650 எம்.பி
1 பிட் என்பது பைனரி எண்ணில் 0 அல்லது 1 ஆகும்.
4 பிட்= 1 நிப்பிள்
8 பிட் = 1 பைட்
1024 பைட்= 1 கிலோ பைட் (KB)
1024 கிலோ பைட் = 1 மெஹா பைட்(MB)
1024 மெஹா பைட் = 1 ஜிகா பைட்(GB)
1024 ஜிகா பைட் = 1 டெரா பைட்(TB)
1024 டெரா பைட் = 1 பீட்டா பைட்(PB)
1024 பீட்டா பைட் = 1 எக்ஸா பைட்(EB)
1024 எக்ஸா பைட் = 1 சேட்டா பைட்(ZB)
1024 சேட்டா பைட் = 1 யோட்டா பைட்(YB)
----------------------------------------------------------------------------------------------------------
மின்னணு சாதனங்கள் செயல்படும் வேகத்தை “ஹெர்ஸ்” என்ற அலகால் அளவிடுகின்றனர்.
(எ.கா)
எனது பெண்டியம் 4 பிராஸசர் 2 GHz வேகம் கொண்டது.
எனது SDRAM 133 MHz வேகம் கொண்டது.
1 =வினாடிக்கு ஒரு சுழற்சி(Hz)
1000 = 1 கிலோ ஹெர்ஸ்(KHz)
1000 = 1 மெகா ஹெர்ஸ்(MHz)
1000 = 1 ஜிகா ஹெர்ஸ்(GHz)
1000 = 1 டெரா ஹெர்ஸ்(THz)
--------------------------------------------------------------------------------------------------------------
சூப்பர் கணினியின் வேகம் “ப்ளாப்ஸ்” என்ற அலகால் அளவிடப்படுகிறது.

FLOPS = Floating point Operation Per Second

Friday, July 11, 2008

மாதர்போர்ட் என்றால் என்ன?

மதர்போர்ட்
இது கணினியின் அனைத்து வன்பொருள்களும் சங்கமிக்கும் ஒரு பெரிய சர்க்யூட் பலகையாகும்.இதை ஆங்கிலத்தில் Printed Circuit Board (PCB ) என்பர்.ஏனென்றால் சர்க்யூட்கள் அனைத்தும் பலகையிலே அச்சடிக்கப்படுவதால் இது பிரின்டட் சர்க்யூட் போர்ட் என்று அழைக்கப்படுகிறது.மின் இணைப்பான்:
மின்சப்ளை பகுதியிலிருந்து(SMPS) வரும் மின்சாரத்தை மதர்போர்டுக்குக் கொடுக்கு உதவுகிறது.
பிராஸசர் இணைப்பான்:

பிராஸசரை மதர்போர்டுடன் இணைக்கப்பயன்படுகிறது.
சில்லுத்தொகுப்பு:

பலவகை கட்டுப்பாட்டு சர்க்யூட்கள் உள்ளிணைக்கப்பட்ட ஒரு சில்லு ஆகும்.இதை மையமாக வைத்தே மதர்போர்ட் வடிவமக்கப்படுகிறது.
நினைவக இணைப்பான்: ராம் நினைவகத்தை மதர்போர்டுடன் இணைக்கப்பயன்படுகிறது.இது சிம்(SIMM),டிம்(DIMM),ரிம்(RIMM) எனப் பலவகைப்படும்.
பயாஸ் ரோம்(BIOS):இது கணினியின் அடிப்படை செயல்களுக்கான மென்பொருளை கொண்டிருக்கும் அழியா நினைவகம் ஆகும்.
சீமாஸ் மின்கலம்(CMOS Battery):

ஒரு ரூபாய் நாணயம் அளவு சிறிய மின்கலம் மதர்போர்டில் இருக்கும்.நமது வன்பொருள்களை பற்றிய தகவல்களை சேமித்துவைத்திற்கும் நினைவகத்திற்கு தொடர்ந்து மின்சப்ளை கொடுப்பதற்காக உள்ளது.

Thursday, July 3, 2008

தமிழில் விண்டோஸ் மற்றும் ஆபிஸ்

விண்டோஸ் மற்றும் ஆஃபிஸ் ஆகியவற்றை தமிழிலே காணவேண்டுமா?
மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்திய மொழிகளுக்கான இடைமுகத்தை தனது இயங்குதளம் மற்றும் ஆஃபிஸ் மென்பொருள் ஆகியவற்றிற்கு வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் நாம் விண்டோஸ் மற்றும் ஆஃபிஸ் ஆகியவற்றை தமிழிலே அணுகலாம்.ஆம் முழு தமிழ் கணினியாயாக விண்டோசை இயக்க முடியும்.

மென்பொருளை பதிவிறக்குவதற்கான இணைப்புகள் கீழே உள்ளன
Office 2003 தொகுப்பிற்கான தமிழ் இடைமுகத் தயாரிப்பு, பெரும்பான்மையான Office 2003 பயனீட்டாளர் இடைமுகத்திற்கு, தமிழ் இடைமுகத்தை அளிக்கிறது
Office 2003 தமிழ் இடைமுக தயாரிப்பு


Office 2007 தொகுப்பிற்கான தமிழ் இடைமுகத் தயாரிப்பு, பெரும்பான்மையான Office 2007 பயனீட்டாளர் இடைமுகத்திற்கு, தமிழ் இடைமுகத்தை அளிக்கிறது

Office 2007 – தமிழ் இடைமுக தயாரிப்பு

Windows XP தொகுப்பிற்கான தமிழ் இடைமுகத் தயாரிப்பு, பெரும்பான்மையான Windows XP பயனீட்டாளர் இடைமுகத்திற்கு, தமிழ் இடைமுகத்தை அளிக்கிறது

Windows XP ® தமிழ் இடைமுக தயாரிப்பு

Windows Vista தொகுப்பிற்கான தமிழ் இடைமுகத் தயாரிப்பு, பெரும்பான்மையான Windows Vista பயனீட்டாளர் இடைமுகத்திற்கு, தமிழ் இடைமுகத்தை அளிக்கிறது

Windows Vista மொழி இடைமுகத் தொகுப்பு

இந்த தகவலிறக்கத்தை நிறுவ:
1. இந்த LIP.exe கோப்பை தகவலிறக்கம் செய்ய தகவலிறக்கம் பொத்தானை (மேலேயுள்ளது) கிளிக் செய்த பின்னர் கோப்பை உங்கள் நிலை வட்டில் சேமிக்கவும்.
2. அமைவு நிரலை துவங்க உங்கள் நிலை வட்டில் உள்ள LIP.exe நிரல் கோப்பை இருமுறை கிளிக் செய்யவும்.
3. நிறுவுதலை நிறைவு செய்ய திரையில் உள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றவும்.
4. விருப்பச் செயல்: Tamil_GS.exe கோப்பை தகவலிறக்கம் செய்து, உங்கள் நிலை வட்டில் சேமிக்கவும். பின்னர் உங்கள் நிலை வட்டில் உள்ள Tamil_GS.exe நிரல் கோப்பை இரு-கிளிக் செய்யவும், நிறுவலை நிறைவு செய்ய திரையில் உள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும்.

வழிகாட்டுதல்கள்:
பயனீட்டாளர் இடைமுக மொழியை Office 2003 பதிப்பு தமிழ் இடைமுக தயாரிப்பின் பயனீட்டாளர் இடைமுக மொழிக்கு மாற்ற, கீழ்கண்ட செயல்களை பின்பற்றவும்:
1. நீங்கள் Start மெனுவில், All Programs சுட்டிக்காட்டி, Microsoft Office சுட்டிக்காட்டி, Microsoft Office Tools என்பதில் சுட்டிக்காட்டவும், பின்னர் Microsoft Office 2003 Language Settings கிளிக் செய்யவும்.
2. பின்னர் User Interface and Help தாவலில், Display Office 2003 in பட்டியலில், நீங்கள் காண்பிக்க விரும்பும் மொழியை தேர்ந்தெடுக்கவும்.
3. பின்னர் OK கிளிக் செய்யவும்.
நீங்கள் தேர்ந்தெடுக்கும் மொழி அமைப்புகள், அடுத்த முறை Office பயன்பாடுகளை நீங்கள் துவங்கும் போது செயற்படுத்தப்படும்.


இந்த தகவலிறக்கத்தை அகற்ற:
1. அனைத்து நிரல்களிலிருந்தும் வெளியேறவும்.
2. நீங்கள் Start மெனுவில், Settings சுட்டிக்காட்டி, பின்னர் Control Panel என்பதில் கிளிக் செய்யவும்.
3. அங்கு Add/Remove Programs என்பதை இரு-கிளிக் செய்யவும்.
4. தற்போது நிறுவப்பட்டுள்ள நிரல்கள் பட்டியலில், Microsoft Office 2003 Edition Tamil Interface Pack கிளிக் செய்யவும். பின்னர், Remove அல்லது Add/Remove கிளிக் செய்யவும். உரையாடல் பெட்டி தோன்றினால், நிரல் அகற்ற வழிகாட்டுதல்களை பின்பற்றவும்.
5. நிரலை அகற்ற விரும்புகிறீர்கள் என்பதை உறுதி செய்ய Yes அல்லது OK கிளிக் செய்யவும்.

Wednesday, July 2, 2008

விண்டோஸ் வாழ்நாள் சுழற்சி

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது ஒவ்வொரு மென்பொருளுக்கும் குறிப்பிட்ட வாழ்நாளை வகுத்துள்ளது.
அதாவது மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிதாக வெளியிடும் ஒவ்வொரு மென்பொருளுக்கும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை ஆதரவு தருவது அதன்பின் அந்த மென்பொருளுக்கான ஆதரவை முடித்துக்கொண்டு அதற்கு அடுத்த பதிப்பிற்கு அதரவு வழங்குவது ஆகும்.
இதை மென்பொருள் வாழ்நாள் சுழற்சி (லைப் சைக்கிள்) என்பர் .
விண்டோஸ் இயக்குதளத்திற்கான வாழ்நாள் சுழற்சியை கீழே காணலாம்.

:அட்டவணை:
இதன்படி மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது விண்டோஸ் 2000 இயக்குதள வெளியீட்டை கடந்த 2004-ம் ஆண்டுடன் நிறுத்திவிட்டது.
விண்டோஸ் XP வெளியீட்டை கடந்த ஜூன் 30 உடன் நிறுத்தியுள்ளது. இனி விண்டோஸ் XP-க்கான மைக்ரோசாப்ட் மென்பொருள் உரிமம் கிடப்பது அரிது .

பில்கேட்ஸ் ஓய்வு

மென்பொருள் உலகில் முடிசூடா மன்னனாக இருந்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அதிபர் திரு.பில்கேட்ஸ் கடந்த ஜூன் 27-ம் தேதி தனது பணியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.


அவரது வாழ்க்கை குறிப்பு சிறு கண்ணோட்டம்

குடும்பம்

பிறந்தது :அக்டோபர் 28 -ஆம் தேதி 1955
தந்தை : வில்லியம் கேட்ஸ்
தாயார்: மேரி கேட்ஸ்
1994 -ஆம் ஆண்டில் மெலிண்டா-வை புத்தாண்டு தினத்தில் திருமணம் செய்தார்.
மூன்று குழந்தைகள் : ஜெநிஃபர் கேதரின் (1996),
ரொறி ஜான் (1999),
அடேல்(2002)

தொழில் வளர்ச்சி
தனது 17-வது வயதில் பள்ளிகளுக்கான நேர அட்டவணையை உருவாக்கும் மென்பொருளை எழுதி $ 4,200 அமெரிக்க டாலருக்கு விற்றார். இது அவரது முதல் மிகப்பெரிய வருமானம்.

கணினி மென்பொருள் மீது கொண்ட ஆர்வத்தால் தனது கல்லூரி படிப்பை பாதியிலே துறந்து கி.பி 1975 –ம் ஆண்டு தனது நண்பர் திரு.பால் ஆலனுடன் சேர்ந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தை தொடங்கினார்.
கி.பி 1980 –ம் ஆண்டு IBM நிறுவனம் மெயின்பிரேம் கணினி வடிவமைப்பிலிருந்து மேசைக்கணினிகளை வடிவமைக்க முனைந்தது.அப்போது அவர்களுக்கு இந்த கணினியில் இயங்ககூடிய இயக்குதளம் தேவைப்பட்டது.அந்த நேரத்தில் பில்கேட்ஸ் டாஸ்(DOS) என்ற இயக்குதளத்தை வடிவமைத்து பங்கு முறையில் விற்றார்.அன்று தொடங்கிய அவரது வருமானம் ,இன்று அவரை உலகின் மிகப்பெரிய பணக்காராக உயர்த்தியுள்ளது.
டாஸ்-க்கு பிறகு 1985-ம் ஆண்டு விண்டோசின் முதல் பதிப்பை மைக்ரோஃசாப்ட் நிறுவனம் வெளியிட்டது.இதில் கிராஃபிக்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டது.இதனால் இது பயனர்களுக்கு டாஸை விட எளிதில் புரியக்கூடியதாகவும் இருந்தது.1990-ம் ஆண்டு வெளியிடப்பட்ட விண்டோஸ் மூன்றாம் பதிப்பு (Windows 3.0) கிட்டதட்ட மூன்று மில்லியன் காப்பிகள் விற்று விற்பனையில் சாதனை படைத்தது.அதன் பின் விண்டோஸ் 95,98,Me,2000,XP, இப்போது விஸ்டா என்று தனக்கென தனிவழி போட்டுக்கொண்டு வெற்றி பாதையில் மைக்ரோஃசாப்ட் நிறுவனத்தை நடத்திவருகிறார்.
மைக்ரோஃசாப்ட் நிறுவனம் இயக்குதளம் மட்டுமல்லாமல் Exchange server, MS Office,Visio,Visual Basic,VB Dotnet போன்று பல பயன்பாட்டு மென்பொருள்களையும் வடிவமைத்து வெளியிடுகிறது.

பில்கேட்ஸ் தனது பணிகளிலிருந்து மட்டுமே ஓய்வு பெறுகிறார்.மைக்ரோஃசாப்ட் நிறுவனத்தின் பங்குகளை அதிகம் பெற்றிருப்பதால்,தொடர்ந்து நிறுவனத்தின் தலைவராக இருப்பார்.
பில்கேட்ஸ் சமூக சேவையில் அதிக ஈடுபாட்டின் காரணமாக “பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை” (B&MGF) என்ற அறகட்டளையை துவக்கி கொடிய நோய்களான எய்ட்ஸ் மற்றும் கேன்சர் ஆகியவற்றை தடுக்க உலகம் முழுவதும் உள்ள அமைப்புகளுக்கு உதவி வருகிறார்.
தனது பிரிவு உபசார விழாவில் பேசிய பில்கேட்ஸ் “சமூக சேவையில் ஈடுபட்டு, ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்வதே என்னுடைய நோக்கம்” என்று கூறினார்.