Monday, May 23, 2011

கூகிள் க்ரோம் புக்(chrom book)

முகில் கணினியக ( cloud computing) தொழில்நுட்பத்தை கணினி பயன்படுத்தும் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் முழுமையாக கொண்டுசொல்ல கூகிள் எடுத்திற்கும் அடுத்தகட்ட முயற்சி என்று சொல்லலாம்.


முகில் கணினியக தொழில்நுட்பத்தை முழுவதுமாக பயன்படுத்தும் புதிய இயக்குதளத்தை(OS) கூகிள் நிறுவனம் வெளியிட உள்ளது.இதற்கு க்ரோம் ஒ.எஸ் என்று பெயர் சூட்டியுள்ளது. இந்த க்ரோம் ஒ.எஸ் நிறுவப்பட்டு வெளியிடப்படும் லேப்டாப்புகளை "க்ரோம் புக்" என்கின்றனர்.இந்த கணினிகள் இயங்க இணைய இணைப்பு மிக முக்கியம்.இணைய இணைப்பு இல்லாமல் உங்களால் எந்த ஒரு மென்பொருளையும் இயக்கமுடியாது.
சில சிறப்பம்சங்கள்:
இது 8 வினாடிகளில் பூட் ஆகக்கூடியது
நூற்றுக்கணக்கான இலவச ஆன்லைன் மென்பொருள்களை கொண்டது.தேவையான மென்பொருள்களை கூகிள் வெப்ஸ்டோர் -லிருந்து நிறுவிக்கொள்ளலாம்.
இணைய இணைப்பிற்கு 3G மற்றும் வை-ஃபை(wi-fi)தொழில்நுட்பம் உள்ளது
தகவல்கள் அனைத்தும் இணையத்திலே சேமிக்கபடுவதால் உலகில் எங்கிருந்தும் உங்கள் தகவலை எடுத்துக்கொள்ளாலம்

ஆண்டி-வைரஸ் மென்பொருள் தேவைபடாதவாறு வடிவமைத்துள்ளனர்.

கூகுள் CR48என்ற க்ரோம் புக் வெளியிட்டுள்ளது.வரும் ஜூன் 15 முதல் சாம்சங் மற்றும் ஏசர் இரண்டு நிறுவனங்களும் கூகுளுடன் இணைந்து க்ரோம் புக்-ஐ வெளிடுகின்றனர்.இது
நம் நாட்டில் இணையம் இப்போது பட்டிதொட்டியெல்லாம் இருந்தாலும் முழுவதும் இணைய இணைப்பை கொண்டு இயங்கும் கணினியின் பயன்பாடு இப்போது சாத்தியபடாது..இன்னும் சிலவருடங்கள் தேவை..

Wednesday, May 18, 2011

கணினி தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அன்றிலிருந்து இன்றுவரை ..




தொழில்நுட்பத்தின் வளர்ச்சி குறித்து நண்பர்களுடன் விவாதித்து கொண்டிருக்கும் போது சக்கரத்திலிருந்து ஆரம்பித்த விவாதம் முகில் கணினியகம் வரை சென்று முடிந்தது . சக்கரம் கண்டுபிடித்த பிறகே மனித நாகரிகம் மிக வேகமாக வளர்ந்தது . அதன் பிறகு அசாத்திய கண்டுபிடிப்பு என்றால் அது கணினி.


கணினி கண்டுபிடிக்கபட்ட 40 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி ,இப்போது மனிதன் கண்டுபித்த அத்தனைக்கும் கணினியின் பங்கு ஏதோ ஒருவகையில் பயன்பட்டுகொண்டிருக்கிறது.


நான் "ஹார்ட்வேர் இன்ஜினீயர்" என்ற புத்தகம் எழுதுவதற்காக கணினியின் ஆரம்பகாலம் குறித்து தேடி படித்தது இப்போது ஒருமுறை பயன்பட்டது.கணினி தொழில்நுட்பத்திற்கு ஆரம்பமாக "ஆபக்கஸ்" -ஐ காட்டுகின்றனர்.இது மணிச்சட்டம் கொண்ட ஒரு சிலேட். கணிதத்தை எளிதாக பயன்படுத்துவதர்க்காக இதை கண்டுபித்தனர். அதன் பிறகு கணிதத்தை எளிதாக்குவதற்கு ஒரு எந்திரத்தை கண்டுபிடிப்பதில் பலர் முயற்சி செய்தனர்.(நேப்பியர்,ஆர்த்ரெட்,பாஸ்கல்,சார்லஸ் பபேஜ் )பிறகு ஹெர்மன் ஹோலரித் மக்கள் தொகை கணக்கெடுப்பிர்க்காக டேபுலட்டிங் மெசின் ஒன்றை உருவாக்கினார் ,பின்னாளில் இவர்தான் (ஐ.பி.எம் )நிறுவனத்தை நிறுவினார்.


அப்போதிருந்த கணினிகள் வெற்றிட குழாய்கள் (vaccum tube) கொண்டு வடிவமைக்கப்பட்டன.இதனால் உருவத்தில் மிக பெரியது ,எடையில் பல நூறு கிலோவும் இருந்தன.


டிரான்ஸ்சிஸ்டர் கண்டுபிடிக்கப்பட்டது கணினி தொழில்நுட்பத்தின் அடுத்த திருப்புமுனையாக அமைந்தது.வெற்றிட குழாய்கள் நீக்கப்பட்டு ,டிரான்ஸ்சிஸ்டர் பயன்படுத்தப்பட்டதால் கணினியின் அளவும்,எடையும் சிறியதாக மாறியது..


டிரான்ஸ்சிஸ்டர்-ஐ இன்னும் எவ்வாறு சுருக்கலாம் என்று ஆராய்ச்சியில் ஈடுபட்டபோது ஐ.சி கண்டுபிடிக்கபட்டது.


பல ஐ.சி சர்க்யூட்களை ஒரே சில்லுக்குள் நுழைக்கலாம் என்று ஆராய்ச்சியில் ஈடுபட்டபோது இன்டெல் நிறுவனத்தின் ராபர்ட் நைஸ் என்பவர் மைக்ரோபிராசசரை கண்டுபிடித்தார்.


மைக்ரோப்ராசசர் கண்டுபிடிக்கப்பட்டபிறகு கணினியின் மிகவும் சிரியதானது.மேசை கணினி,மடிக்கணினி,கைகணினி என்று அளவில் சுருங்கிக் கொண்டே செல்கிறது.
கணினியின் பரிணாம வளர்ச்சி :


Mainframe computer -> Mini computer -> Micro computer -> Mobile computer -> Virtualization -> Cloud computing..




அடுத்தகட்டம் virtualization,cloud computing இதை பற்றி அடுத்து பார்க்கலாம் ..

Friday, May 6, 2011

கூகுள் அனலிடிக்ஸ்


உங்கள் இணையதளத்தை அலசி ஆராய இலவசமாக கிடைக்கும் மிகசிறந்த ஆன்லைன் மென்பொருள்.உங்கள் இணையதளம் எத்தனை தடவை அணுகப்பட்டுள்ளது,அதிகமாக எந்தபக்கத்தை பார்த்துள்ளனர்,நாள்வாரியாக அறிக்கை,போன்று உங்கள் இணையதளத்தை பற்றி பல தகவல்களை கொடுக்கிறது.

உங்கள் இணையதளத்தை கூகுள் அனலிடிக் தளத்தில் பதிவுசெய்துவிட்டால் உங்களது இணையதளத்தை பற்றி அத்தனை தகவலையும் அது ஆராய்ந்து உங்களுக்கு எளிதில் புரிந்துகொள்கிற வடிவில் படங்களாகவும்,தகவல்களாகவும் தருகிறது
.



மேலும் தகவல்களுக்கு:
http://www.google.com/analytics/