Sunday, November 7, 2010

ஸ்பீட் 1 டெரா ஹெர்ட்ஸ் மெமரி 1 ஜெட்டா பைட்

சில நண்பர்கள் எந்திரன் படம் பார்த்துவிட்டு அது என்ன டெரா ஹெர்ட்ஸ் , ஜெட்டா பைட் என்றால் என்ன என்று கேட்டு மெயில் அனுப்பியிருந்தார்கள்....அவர்களுக்காகவும்..அதை பற்றி தெரிந்துகொள்ள விரும்புபவர்காகவும்..

டெரா ஹெர்ட்ஸ் என்றால் என்ன என்று ஏற்கனவே இந்த ப்ளாகில் விவரித்துள்ளேன் ..

டெரா ஹெர்ட்ஸ்

அடுத்ததாக ஜெட்டா பைட் என்றால் என்ன என்று பார்ப்போம்..

ஒரு தகவலை ஹார்ட்டிஸ்கில் அல்லது மெமரி கார்டில் சேமிக்க எடுத்துகொள்ளும் அளவை பைட்டில்(Byte) கூறுவோம்.

(எ.கா) ஒரு MP3 பாடல் கோப்பை சேமிக்க 5MB இடம் தேவைப்படும்.
1
பிட் என்பது பைனரி எண்ணில் 0 அல்லது 1 ஆக இருக்கும்.
1
பிட் = 0 அல்லது 1
4
பிட் = 1 நிப்பிள் (1nibble)

8 பிட் = 1 பைட்

1024 பைட் = 1 கிலோ பைட் (KB) Kilo Byte

1024 கிலோபைட் = 1 மெகா பைட் (MB) Mega Byte

1024 மெகா பைட் = 1 ஜிகா பைட் (GB) Gega Byte

1024 ஜிகா பைட் = 1 டெரா பைட் (TB) Tera Byte

1024 டெரா பைட் = 1 பீட்டா பைட் (PB) Peta Byte

1024 பீட்டா பைட் = 1 எக்ஸா பைட் (EB) Exa Byte

1024 எக்ஸா பைட் = 1 ஜெட்டா பைட் (ZB) Zetta Byte

1024 ஜெட்டா பைட் = 1 யோட்டா பைட் (YB) Yotta Byte

Monday, August 9, 2010

மைக்ரோசாப்டின் விஸ்டா

மைக்ரோசாப்டின் விஸ்டா ஆபரேட்டிங் சிஸ்டத்தை எவ்வாறு நிறுவது என்று தமிழில் ஒரு விளக்க கையேடு..இது பயனுள்ளதாக இருந்தால் தெரியபடுத்தவும்..இதேபோல் மற்ற மென்பொருள்களுக்கும் மின்புத்தகங்களை இலவசமாக இங்கு வெளிடலாம்

விஸ்டா நிறுவுதல்

Monday, August 2, 2010

உஷார் மக்களே !! ஆன்-லைன் வங்கி பரிவர்த்தனை


முக்கியமான வங்கி தகவல்களை வங்கியிலிருந்து கேட்பதாக கேட்டு
உங்களுக்கே ஆப்புவைக்க ஒரு கோஷ்டி இணையத்தில் வளம் வந்து
கொண்டிருக்கிறது..முதன்முறையாக அதேபோல் ஒரு மெயில் எனக்கு வந்தது..என்னால் பார்த்தவுடனே அறிந்துகொள்ள முடிந்தது..இது ஒரு ஹேக் மெயில் என்று.சரி என்ன மாதிரி தகவல்களை கேட்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள சும்மா சில உல்டா தகவல்களை கொடுத்தபோது தெரியவந்தது..அதிர்ச்சியான தகவல்...

உங்களது வங்கி தகவல்களை சரிபார்க்கவேண்டும்..தயவுசெய்து உங்களது தகவல்களை கொடுத்து சரிபார்க்கவும்..என்று வங்கியிலிருந்து மெயில் வருவதுபோல்...ஒரு மின்னஞ்சல் வரும்..அதை திறந்தவுடன்..ஆன்-லைன் வங்கி பரிமாற்றத்திற்கு என்ன தகவல்களை கொடுப்பீர்களோ ,அந்த தகவல்களை கேட்டு ஒரு திரை வரும்...அத்தோடு விட்டு விடாமல்..அடுத்த திரையில்..உங்கள் டெபிட் கார்டில் உள்ள கிரிட் எண்கள் அத்தனையும் டைப் செய்ய சொல்லி ஒரு திரை
வரும்..இங்கு உங்கள் தகவலை கொடுத்தபிறகு..சமர்த்தாக வங்கியின் உண்மையான இணைய முன் பக்கத்திற்கு சென்றுவிடும்(இது உங்களை நம்ப வைப்பதற்காக..) -இந்த தகவலை வங்கிக்கும் தெரியபடுத்தியுள்ளேன்..
கவனிக்க வேண்டியது..
போலியான மின்னஞ்சல் முகவரி..alers@icicialerts.com(எனக்கு வந்த மின்னஞ்சல் முகவரி)
போலியான இணையதள முகவரி..
ஆன்-லைன் பரிவர்த்தனை செய்யும் போது வங்கி சொல்லும் அனைத்து பாதுகாப்பு விதிகளையும் கடைபிடிக்கவும்..
முக்கியமாக வங்கி கடவு சொல்லை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதிர்கள்.
ஆன்-லைன் பரிவர்த்தனை செய்யும் போது கவனமாக இருக்கவும்..சந்தேகம் ஏற்ப்பட்டால் வங்கியின் ஹெல்ப்-லைனை அழைக்கவும்.



Sunday, June 13, 2010

கேள்வி பதில்-2

கேள்வி
உதவுங்கள்
BSPicture.Rar என்று உள்ளது.
இதனை எப்படி பாவிப்பது. உதவுங்கள்

அன்புடன்

- கபிரியேல்

-----------------------------------------

பதில்

வணக்கம் கபிரியேல் ,
BSPicture.Rar ஒருவகை இறுக்கப்பட்ட கோப்பு வகை.இந்த வகை கோப்புகளை திறக்க வின்ரேர்(winrar) என்ற மென்பொருள் தேவைப்படும்.இதை நீங்கள் கீழ்கண்ட இணையதளத்திலிருந்து பதிவிறக்கி கொள்ளலாம்.

http://download.cnet.com/WinRAR-32-bit/3000-2250_4-10007677.html


Friday, May 28, 2010

இன்டெல் i7

தற்போது பரபரப்பாக பேசப்படும் இன்டெலின் புதிய பிராசசர் இன்டெல் i7ஆகும்.இன்டெல் புதிதாக எனென்ன மாறுதல்கள் செய்துள்ளது என்று அறிந்துகொள்ள இணையத்தில் உலாவியபோது கீழ்கண்ட இணையதளத்தில் விரிவாக அறிந்துகொள்ள முடிந்தது.இதை இன்டெலின் அடுத்த தலைமுறை பிராசசர் என்றே சொல்லலாம்.

மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள -> இன்டெல் i7 உள்-கட்டமைப்பு தொழிநுட்பம்