Friday, December 26, 2008

விண்டோஸ் XP-டிப்ஸ் -3

விண்டோஸ் XP-ல் CD/DVD autoplay ஆவதை நிறுத்த
1) Click Start, Run சென்று GPEDIT.MSC தட்டச்சு செய்யவும்
2) வரும் திரையில் Computer Configuration, Administrative Templates, System செல்லவும்
3) வலது புறம் Turn autoplay off டபுள் க்ளிக் செய்து enable செய்யவும்

விண்டோஸ் XP -ல் பூட் பிளாப்பி உருவாக்குவது எப்படி?
புதிய பிளாப்பி டிஸ்க்கை அதன் டிரைவில் நுழைக்கவும்
MY Computer சென்று பிளாப்பி டிஸ்க் icon- ஐ வலது க்ளிக் செய்து format தேர்வு செய்யவும்
வரும் திரையில் format option சென்று Create an MS-DOS startup disk என்பதை தேர்வு செய்யது ok கொடுக்கவும்.
இதற்கு குறைந்தது 5 பிளாப்பி டிஸ்க் தேவைப்படும்.
ஒருவேளை உங்களிடம் கணினியை பூட் செய்ய விண்டோஸ் XP CD இல்லைஎன்றால் இந்த பிளாப்பியை பயன்படுத்தி பூட் செய்யலாம்

Monday, December 22, 2008

கணினி பிழைச்செய்தியும் அதற்கான தீர்வுகளும்...


1.பிழைச்செய்தி:No Fixed Disk present:
காரணம்:ஹார்ட்ரைவ் சரியாக இணைக்கவில்லை என்றால் இவ்வாறு பிழைச்செய்தி வரும்.ஹார்ட்ரைவின் மின் இணைப்பானை சரிபார்க்கவும்.அனைத்து கேபிளிலும் சரியான மின்னழுத்தம் உள்ளதா என்று சரிபார்க்கவும்.பிறகு இணைப்பு கேபிளை சரியாக இணைக்கவும்.

2.Error Reading Drive C"
ஹார்ட்ரைவின் இணைப்புகள் சரியாகவுள்ளதா என்று சரிபார்க்கவும்.இணைப்புக் கேபிளில் பழுதிருந்தால் அதை மாற்றிடவும்.மீண்டும் பிழை செய்திவந்தால் ஆண்டிவைரஸ் நிரலை பயன்படுத்தி வைரஸ் இருந்தால் அதை நீக்கிவிடவும்.பிறகும் பிழை செய்தி வந்தால் "Scan disk" -ஐ இயக்கி செக்டார்கள் ஏதும் பழுதாகியுள்ளதா என்று பார்க்கவும்.செக்டார்கள் பழுதாகி இருந்தால் ஹார்ட்ரைவை மாற்றவும்.

3.Track 0 not Found
டிரைவின் ட்ராக் "0" கெட்டிருந்தால் இவ்வாறு பிழைச்செய்தி வரும். டிரைவின் கோப்பு விவர அட்டவணை(FAT) இங்கு தான் பதிந்திருக்கும்.இந்த அட்டவணையைக் கொண்டுதான் டிரைவில் பதிந்திருக்கும் அனைத்துத் தகவலையும் எழுத/படிக்க முடியும்.பூட் பிளாப்பியை பயன்படுத்தி
ஹார்ட்டிரைவை பார்ட்டீசியன் பன்னவும்.மீண்டும் இதே பிழை செய்தி வந்தால் ஹார்ட்டிரைவை மாற்றவும்.

4.கணினியை "ஆன்" செய்தும் திரையில் டிஸ்பிளே வரவில்லை.
1.மானிட்டரின் மின் கேபிள் சரியாக இணைக்கப்பட்டுள்ளதா என்று சரிபார்க்கவும்.
2.மானிட்டரின் பொத்தான் "ஆன்" ஆகியுள்ளதா என்று பார்க்கவும்.
3.மானிட்டரின் இணைப்பு கேபிளை(interface cable) சரிபார்க்கவும்.
4.மானிட்டரின் Brightness control-ஐச் சரிபார்க்கவும்.
5.வி.ஜி.ஏ கார்டைச் சரிபார்க்கவும்.
6.நினைவகத்தை சரிபார்க்கவும்.

5.கணினியை "ஆன்" செய்தவுடன் ஒரு பெரிய பீப் ஒலி மற்றும் இரண்டு சிறிய பீப் ஒலி வந்து டிஸ்பிளே வரவில்லை என்றால்:
1.வி.ஜி.ஏ(VGA) கார்டைச் சரிபார்க்கவும்.
2.வேறு வி.ஜி.ஏ கார்டை மாற்றவும்.

6.கணினியை "ஆன்" செய்தவுடன் "No keyboard is connected " அல்லது "Keyboard not present" என்ற பிழைச் செய்தி வருகிறது.
1.விசைப்பலகை சரியாக இணைக்கப்பட்டுள்ளதா என்று சரிபார்க்கவும்.
2.விசைப்பலகையின் கேபிளை சரிபார்க்கவும்.எங்கேனும் துண்டிக்கப்பட்டுள்ளதா என்று பார்க்கவும்.
3.நன்றாக இயங்கும் வேறு ஒரு விசைப்பலகையை இணைக்கவும்.அதன்பிறகும் பிழை செய்தி வந்தால் மதர்போர்டின் விசைப்பலகை இணைப்பானில் பிரச்சனை இருக்கலாம்.

7.DVD -ல் உள்ள தட்டை(tray) பகுதி வெளிவரவில்லை
1.DVD மூலம் ஏதேனும் படங்களை இயக்கி கொண்டிருக்கும் போது வெளிவராது.எனவே DVD மூலம் திறந்திருக்கும் மென்பொருள்களை மூடி விட்டு முயற்சிக்கவும்.இல்லையென்றால் கனினியை ரீஸ்டார்ட் செய்தபின் முயற்சிக்கவும்.
2.DVD டிரைவின் மின் இணைப்பியை சரிபார்க்கவும்.அப்படியும் திறக்கவில்லையா டிவிடி தட்டை இயக்கும் மோட்டார் பழுந்தடைந்திருக்கலாம்.
3.டிவிடி டிரைவின் முன் புறம் உள்ள சிறுதுளையில் நீண்ட மெல்லிய கம்பியை நுழைத்தால் டிவிடி தட்டைப் பகுதி வெளியே வரும்.

8.கணினியை "ஆன்" செய்தவுடன் தொடர்ச்சியாக பீப் ஒலி வந்து டிஸ்பிளே வரவில்லை என்றால்..
1.நினைவகத்தை (RAM) சரியாக இணைக்கவும்
2.நினைவகத்தை மாற்றவும்.

9.Bad command are file name..
நீங்கள் கொடுத்த டாஸ்(DOS) கட்டளை சரியான கட்டளைதானா என்று சரிபார்க்கவும்.கட்டளையில் ஏதேனும் சிறு தவறு நேர்ந்திருந்தாலும் இவ்வாறு பிழை செய்தி வரும்.

10.Insufficient Disk Space
டிஸ்க்-ல் தகவலை பதிக்க போதிய இடம் இல்லையெனில் இவ்வாறு பிழைச்செய்தி வரும்.தேவையில்லாத கோப்புகளை அழித்துவிட்டால் இடம் கிடைக்கும்.


Friday, December 19, 2008

மின்சப்ளை பகுதி(SMPS)


மின்சப்ளை பகுதி
கணினியின் அனைத்து வன்பொருள்களுக்கு தேவையான மின்த்தேவையை தரக்கூடியது இந்த SMPS. கணினி ஒரு மின்னணு சாதனம் என்பதால் அது நேர்மின்னழுத்தத்தில் மட்டுமே இயங்கும்.அதனால் தான் நாம் இந்த SMPS -ஐ பயன்படுத்துகிறோம்.இது மாறுதிசை(AC) மின்னோட்டத்தை நேர்திசை(DC) மின்னோட்டமாக மாற்றுகிறது.
SMPS-லிருந்து வரும் நேர்மின்னழுத்தம்(DC) மதர்போர்டின் மின் இணைப்பான் மூலமாக மதர்போர்டின் அனைத்து பாகங்களுக்கும் செல்கிறது.
இந்த மின் இணைப்பான் இருவகைப்படும்.
1.AT வகை மின் இணைப்பான்
2.ATX வகை மின் இணைப்பான்
AT வகை மின் இணைப்பான்
இது இரண்டு 6 பின்களைக் கொண்ட மின் இணைப்பான்.இதில் +5v, +12v, Ground, -12v,-5v எனப் பலவகையான நேர்மின்னழுத்தம் பயன்படுத்தப்படுகிறது.இப்போது வரும் மதர்போர்டில் இது பயன்படுத்தப்படுவதில்லை.
ATX வகை மின் இணைப்பான்
இதில் பல வண்ண ஒயர்கள் பயன்படுத்தப்படுகிறது.ஒவ்வொரு வண்ணமும் அது கடத்தும் மின்னழுத்தத்தை குறிக்கிறது.இப்போது வரும் மதர்போர்டில் இந்த வகை இணைப்பான்களே பயன்படுத்தப்படுகிறது.