லினக்ஸ் பொதியப்பட்ட டிவிடி வட்டை அதன் இயக்கியில் வைத்து கணினியை டிவிடி மூலம் பூட் செய்யவும். முதல் திரையில் வரும் 5 விருப்பங்களில் முதலில் உள்ள Install or Upgrade an existing system தேர்வு செய்து என்டர் விசையை அழுத்தவும்.
இப்போது வருவது பெடோரா லினக்ஸ் பொதியப்பட்ட நமது டிவிடியை சரிபார்க்க உதவும் திரை.சரிபார்க்க வேண்டாம் என்றால் Skip க்ளிக் செய்து நிறுவலை தொடங்கலாம் லினக்ஸ் நிறுவல் தொடங்குவதற்கான முதல் திரை.இதை Next என்பதை க்ளிக் செய்யவும் முக்கியமான திரை.எந்த மொழியில் லினக்சை நிருவப்போகிறோம் என்பதில் தமிழ் மொழியை தேர்வுசெய்து என்பதை Next க்ளிக் செய்யவும்.இதற்கு பிறகு வரும் திரை அனைத்தும் நமது தமிழ் மொழியில் தெரியும். கணினிக்கு தகுந்த விசைப்பலகையை தேர்வு செய்யவும்.உங்களுக்கு எது விருப்பமோ அதை தேர்வு செய்யலாம்.நான் இங்கு யு.எஸ்.ஆங்கிலம் என்பதை தேர்வு செய்துள்ளேன்.இங்கு தமிழ்(இன்ஸ்கிரிப்ட்) மற்றும் தமிழ்(Typewritter) விசைப்பலகைகளும் உள்ளன.
இப்போது வருவது நிலைவட்டில் பகிர்வுகளை உருவாக்கும் திரை.இதில் முன்னிருப்பாக(default) தேர்வு செய்யப்பட்ட பகிர்வு(Partition) அமைப்பு பெரும்பாலான பயனர்களுக்கு ஏற்றதாக இருக்கும்.
இல்லையென்றால் கிழ்கண்ட நான்கு விருப்பங்களில் ஒன்றை தேர்வு செய்து பகிர்வுகளை உருவாக்கவும். பூட் லோடரை பற்றிய தகவல்களை கொடுக்கவேண்டும். முன்னிருப்பு விருப்பம் என்னவோ அதை தேர்வு செய்து அடுத்து அழுத்தவும்
இந்த திரையில் பிணைய(Network) சாதனங்களுக்கு தேவையான தகவல்கள் மற்றும் புரவலன் பெயர்(host name) போன்றவற்றை கொடுத்து அடுத்து பொத்தானை அழுத்தவும்
DHCP தேர்வு செய்யப்பட்டிருந்தால் தானாகவே IP,DNS ,hostname போன்றவற்றை அமைத்துக்கொள்ளும்.இல்லையென்றால் நீங்கள் கைமுறையாக(custom) கொடுக்கலாம் அடுத்து
கட்டற்ற மென்பொருள்களை வழங்கும் குனு உரிமத்தை பற்றி தமிழில் தெரிந்துகொள்ள கிழ்கண்ட இணைப்புகளை பார்வையிடவும் (திரு.ரிச்சர்ட் எம்.ஸ்டால்மேன் எழுதிய கட்டுரை )