Wednesday, July 2, 2008

பில்கேட்ஸ் ஓய்வு

மென்பொருள் உலகில் முடிசூடா மன்னனாக இருந்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அதிபர் திரு.பில்கேட்ஸ் கடந்த ஜூன் 27-ம் தேதி தனது பணியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.


அவரது வாழ்க்கை குறிப்பு சிறு கண்ணோட்டம்

குடும்பம்

பிறந்தது :அக்டோபர் 28 -ஆம் தேதி 1955
தந்தை : வில்லியம் கேட்ஸ்
தாயார்: மேரி கேட்ஸ்
1994 -ஆம் ஆண்டில் மெலிண்டா-வை புத்தாண்டு தினத்தில் திருமணம் செய்தார்.
மூன்று குழந்தைகள் : ஜெநிஃபர் கேதரின் (1996),
ரொறி ஜான் (1999),
அடேல்(2002)

தொழில் வளர்ச்சி
தனது 17-வது வயதில் பள்ளிகளுக்கான நேர அட்டவணையை உருவாக்கும் மென்பொருளை எழுதி $ 4,200 அமெரிக்க டாலருக்கு விற்றார். இது அவரது முதல் மிகப்பெரிய வருமானம்.

கணினி மென்பொருள் மீது கொண்ட ஆர்வத்தால் தனது கல்லூரி படிப்பை பாதியிலே துறந்து கி.பி 1975 –ம் ஆண்டு தனது நண்பர் திரு.பால் ஆலனுடன் சேர்ந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தை தொடங்கினார்.
கி.பி 1980 –ம் ஆண்டு IBM நிறுவனம் மெயின்பிரேம் கணினி வடிவமைப்பிலிருந்து மேசைக்கணினிகளை வடிவமைக்க முனைந்தது.அப்போது அவர்களுக்கு இந்த கணினியில் இயங்ககூடிய இயக்குதளம் தேவைப்பட்டது.அந்த நேரத்தில் பில்கேட்ஸ் டாஸ்(DOS) என்ற இயக்குதளத்தை வடிவமைத்து பங்கு முறையில் விற்றார்.அன்று தொடங்கிய அவரது வருமானம் ,இன்று அவரை உலகின் மிகப்பெரிய பணக்காராக உயர்த்தியுள்ளது.
டாஸ்-க்கு பிறகு 1985-ம் ஆண்டு விண்டோசின் முதல் பதிப்பை மைக்ரோஃசாப்ட் நிறுவனம் வெளியிட்டது.இதில் கிராஃபிக்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டது.இதனால் இது பயனர்களுக்கு டாஸை விட எளிதில் புரியக்கூடியதாகவும் இருந்தது.1990-ம் ஆண்டு வெளியிடப்பட்ட விண்டோஸ் மூன்றாம் பதிப்பு (Windows 3.0) கிட்டதட்ட மூன்று மில்லியன் காப்பிகள் விற்று விற்பனையில் சாதனை படைத்தது.அதன் பின் விண்டோஸ் 95,98,Me,2000,XP, இப்போது விஸ்டா என்று தனக்கென தனிவழி போட்டுக்கொண்டு வெற்றி பாதையில் மைக்ரோஃசாப்ட் நிறுவனத்தை நடத்திவருகிறார்.
மைக்ரோஃசாப்ட் நிறுவனம் இயக்குதளம் மட்டுமல்லாமல் Exchange server, MS Office,Visio,Visual Basic,VB Dotnet போன்று பல பயன்பாட்டு மென்பொருள்களையும் வடிவமைத்து வெளியிடுகிறது.

பில்கேட்ஸ் தனது பணிகளிலிருந்து மட்டுமே ஓய்வு பெறுகிறார்.மைக்ரோஃசாப்ட் நிறுவனத்தின் பங்குகளை அதிகம் பெற்றிருப்பதால்,தொடர்ந்து நிறுவனத்தின் தலைவராக இருப்பார்.
பில்கேட்ஸ் சமூக சேவையில் அதிக ஈடுபாட்டின் காரணமாக “பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை” (B&MGF) என்ற அறகட்டளையை துவக்கி கொடிய நோய்களான எய்ட்ஸ் மற்றும் கேன்சர் ஆகியவற்றை தடுக்க உலகம் முழுவதும் உள்ள அமைப்புகளுக்கு உதவி வருகிறார்.
தனது பிரிவு உபசார விழாவில் பேசிய பில்கேட்ஸ் “சமூக சேவையில் ஈடுபட்டு, ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்வதே என்னுடைய நோக்கம்” என்று கூறினார்.

No comments:

Post a Comment