Monday, October 22, 2012

மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ்

மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் (Microsft Surface)

கணினி சந்தையில் இன்று அதிகமாக விற்பனையாகி  கொண்டிருக்கும் ஆண்ட்ராய்ட் மற்றும் 
ஆப்பிள் கைக்கணினிகளுக்கு (டேப்லெட்) போட்டியாக நீண்ட ஆராய்ச்சிக்கு பின் மைக்ரோசாப்ட் நிறுவனம் சர்ஃ பேஸ்  என்னும் புதிய கைக்கணினியை கடந்த ஜூன் மாதம் வெளியிட்டது. பொது பயன்பாட்டிற்கு வரும் அக்டோபர் மாதம் 26-ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது மற்றும் இதற்கான முன்பதிவை கடந்த 16-ஆம் தேதி துவக்கியுள்ளது.

டெஸ்க்டாப் மற்றும் மடிக்கணினிகள் விற்பனையில் மைக்ரோசாப்ட் ஆதிக்கம் அதிகம் இருந்தது ஆனால் மொபைல் மற்றும் கைக்கணினி சந்தையில் வெற்றி பெறமுடியவில்லை.
இதனால் நீண்ட இடைவெளிக்குப்பின் விண்டோஸ் 8 இயங்குதளம் மற்றும் பல புதிய தொழில்நுட்பத்துடன் களத்தில் இறங்கியுள்ளது. இந்த முயற்சி மைக்ரோசாப்ட்-க்கு வெற்றியா? இல்லை தோல்வியா? என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இந்த மைக்ரோசாப்ட் சர்ஃ பேஸ்  இரண்டு பிரிவுகளில் வருகிறது.
1. மைக்ரோசாப்ட் சர்ஃ பேஸ்  RT
2.மைக்ரோசாப்ட் சர்ஃ பேஸ்  Pro

முதலில் விற்பனைக்கு வருவது சர்ஃ பேஸ் RT ஆகும்.அடுத்த மூன்று மாதத்தில் சர்ஃ பேஸ் Pro வெளிவரும் என மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.அது சரி இவை இரண்டிற்கும் என்ன வித்தியாசம் என்று வினவுகிறீர்களா?பயன்படுத்தப்படும் தொழிநுட்பம் மற்றும் அதற்கேற்ற விலை மட்டுமே.இவை இரண்டுக்குமான வித்தியாசம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சர்ஃ பேஸ் RT

பிராசசர்(நுண்செயலி)    - ARM  Cortex-A49
மெமரி (நினைவகம்)      - 2GB 
திரை   - 1366 x 768 px 10.6 inches
அகலம்   10.81 அங்குலம்  (27.5 செ.மீ)
உயரம்    6.77 அங்குலம் (17.2  செ.மீ)
தடிமன்   0.37 அங்குலம் (9.4  செ.மீ)
மின்சாரம் :31.5 W
கேமரா:  720 பிக்சல் முன்/பின் பக்கம்
எடை : 680 கிராம்

இயங்குதளம் (OS)  : மைக்ரோசாப்ட் விண்டாஸ் 8 RT
மெமரி கார்டு : 64 GB SDXCஅதிகபட்ச அளவு

 சர்ஃ பேஸ் Pro
பிராசசர்(நுண்செயலி) - இன்டெல் கோர் i 5 
மெமரி (நினைவகம்)    -  2GB
திரை -  
அகலம்   10.81 அங்குலம்  (27.5 செ.மீ)
உயரம்    6.81 அங்குலம் (17.2  செ.மீ)
தடிமன்   0.51 அங்குலம் (9.4  செ.மீ)
மின்சாரம் :42 W
கேமரா:  720 பிக்சல் முன்/பின் பக்கம்
எடை : 910 கிராம்

இயங்குதளம் (OS) : மைக்ரோசாப்ட் விண்டாஸ் 8 PRO
மெமரி கார்டு : 128 GB SDXCஅதிகபட்ச அளவு


கீபோர்ட் எளிதாக ஒட்டி எடுக்க கூடிய வகையில் விளிம்புகளில் காந்தங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை பல வண்ணங்களில் கிடைக்கிறது.
 


பின் புறம்  கைக்கணினியை நிமிர்த்தி வைத்து தாங்கி பிடிக்க ஒரு நிருத்தியை(stand) இணைத்து வைத்துள்ளனர்.
 
 

மைக்ரோசாப்ட் சர்ஃ பேஸ் RT யின் விலை  $499 டாலர் ஆகும் இதனுடன் இந்த கீபோர்டையும் சேர்த்து வாங்கினால்  $119 டாலர் கூடுதல் செலவாகும். இதை விட குறைந்த விலையில் கிடைக்கும் ஆண்ட்ராய்டு கைக்கணினிகளுடன் போட்டியிட்டு கணினி சந்தையில் தன்னை நிலைநிறுத்தி கொள்ளுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

                                                                                                                              -ரெங்கராஜன்











 

Friday, September 28, 2012

கணினியின் வரலாறு

கணினியின் வரலாறு :

இன்றைய உலகில் அதிமுக்கிய சாதனம் அது கணினி என்றே சொல்லலாம்.கணினியின்றி கிடையாது உலகு என்று சொல்லும் அளவுக்கு அனைத்து துறைகளிலும் அதன் பங்கு மகத்தானது. ஆரம்ப காலத்தில் கணினி பெரிய பெரிய ஆய்வுகூடங்கள்,பல்கலைகழகங்கள் ,உயர் தொழில்நுட்ப கூடங்களில் மட்டும் பயன்படுத்தப்பட்டன.பிறகு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. கணினியின் வரலாற்றை அதன் ஆரம்பத்திலிருந்து பார்க்கலாம்.
கற்காலத்தில் தனித்தனியாக திரிந்த ஆதிமனிதன் நாகரிகம் தோன்றியதன் காரணமாக கூட்டமாக ஒரே இடத்தில் வாழ தொடங்கினான். அப்போது அவனுக்கு தன வளர்ப்பு பிராணிகளை எண்ணுவதற்கு,உணவு தானியங்களை அளவிடுவதற்கு,பங்கிடுவதற்கு எண்களை கண்டுபிடித்தான்.முதலில் எண்களை கூட்டுவதற்கு ,கழிப்பதற்கு,பெருக்க விரல்களை பயன்படுத்தினான்,பிறகு கூலாங்கற்கள் ,காசுகளை பயன்படுத்தினான்.

சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் சீனர்கள்,ஜப்பானியர்கள், பெரிய எங்களை கூட்ட,பெருக்க "அபாக்கஸ்" என்ற மனிசட்டத்தை பயன்படுத்த தொடங்கினர். இதுதான் கணித செயல்முறைகளை இயக்க உதவும் முதல் சாதனமாக கருதப்படுகிறது.


கி.பி.1619-ல் ஸ்காட்லாந்து நாட்டை சேர்ந்த "ஜான் நேப்பியர்" என்ற அறிஞர் சில எலும்பு துண்டுகளை குடைந்து ஒரு கருவியை உருவாக்கினார்.அதை "நேப்பியர் போன்ஸ்" என்று அழைத்தனர்.இதன் மூலம் பெருக்கல்,வகுத்தல் போன்ற செயல்முறைகளை எளிதாக செய்ய முடிந்தது.இவர் தான் பிற்காலத்தில் லாகிர்தமின் தந்தை என்று அழைக்கப்பட்டார்.

கி.பி.1622-ல் வில்லியம் ஆல்ட்ரெட் என்பவர் "ஸ்லைட் ரூல் " என்ற கருவியை கண்டுபிடித்தார் .கால்குலேட்டர் கண்டுபிடிப்பதற்கு முன் இந்த கருவியதான் கணித பயன்பாட்டிற்கு பலர் பயன்படுத்தினர். பெருக்கல் குறியீட்டுக்கு முதன் முதலில் "x" -ஐ பயன்படுத்தியது இவர்தான்.
 

தொடரும்...
 

Saturday, March 3, 2012

விண்டோஸ் 8

மைக்ரோசாப்ட் நிறுவனம் சோதனை ஓட்டமாக விண்டோஸ் 8 -ஐ வெளியிட்டுள்ளது .பயனீட்டாளர்கள் இதை நிறுவி இதில் உள்ள நிரை குறைகளை மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு தெரிவிக்கலாம்.
விண்டோஸ் 8 -ஐ பதிவிறக்க ..

முதல் முயற்சியாக விண்டோஸ் 8-ஐ AMR பிராசசர் வன்பொருள்களிலும் இயங்குமாறு வடிவமைத்துள்ளனர்.தற்போது இருக்கும் மொபைல் சாதனங்களிலும் விண்டோசின் பயன்பாட்டை அதிகரிக்க இந்த முயற்சி என்று சொல்லலாம்.
விண்டோஸ் 8 -ஐ மொபைல் சாதனங்களில் நிறுவினால் அத்துடன் மைக்ரோசாப்ட் ஃ ஆபிஸ் மென்பொருள்களான வோர்ட்,எக்சல் ,பவர் பாயின்ட் இலவசமாக கிடைக்க வழிவகை செய்துள்ளனர்.
விண்டோஸ் 8 -இன் வடிவமைப்பில் பெரும்பாலும் முகில் கணினியகம் மற்றும் தொடுதிரை கணினிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது .
விண்டோஸ் 8 உடன் இன்டர்நெட் எக்ஸ் போலரர் 10 (IE-10) -உம் வெளியிட்டுள்ளனர்.