Friday, September 28, 2012

கணினியின் வரலாறு

கணினியின் வரலாறு :

இன்றைய உலகில் அதிமுக்கிய சாதனம் அது கணினி என்றே சொல்லலாம்.கணினியின்றி கிடையாது உலகு என்று சொல்லும் அளவுக்கு அனைத்து துறைகளிலும் அதன் பங்கு மகத்தானது. ஆரம்ப காலத்தில் கணினி பெரிய பெரிய ஆய்வுகூடங்கள்,பல்கலைகழகங்கள் ,உயர் தொழில்நுட்ப கூடங்களில் மட்டும் பயன்படுத்தப்பட்டன.பிறகு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. கணினியின் வரலாற்றை அதன் ஆரம்பத்திலிருந்து பார்க்கலாம்.
கற்காலத்தில் தனித்தனியாக திரிந்த ஆதிமனிதன் நாகரிகம் தோன்றியதன் காரணமாக கூட்டமாக ஒரே இடத்தில் வாழ தொடங்கினான். அப்போது அவனுக்கு தன வளர்ப்பு பிராணிகளை எண்ணுவதற்கு,உணவு தானியங்களை அளவிடுவதற்கு,பங்கிடுவதற்கு எண்களை கண்டுபிடித்தான்.முதலில் எண்களை கூட்டுவதற்கு ,கழிப்பதற்கு,பெருக்க விரல்களை பயன்படுத்தினான்,பிறகு கூலாங்கற்கள் ,காசுகளை பயன்படுத்தினான்.

சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் சீனர்கள்,ஜப்பானியர்கள், பெரிய எங்களை கூட்ட,பெருக்க "அபாக்கஸ்" என்ற மனிசட்டத்தை பயன்படுத்த தொடங்கினர். இதுதான் கணித செயல்முறைகளை இயக்க உதவும் முதல் சாதனமாக கருதப்படுகிறது.


கி.பி.1619-ல் ஸ்காட்லாந்து நாட்டை சேர்ந்த "ஜான் நேப்பியர்" என்ற அறிஞர் சில எலும்பு துண்டுகளை குடைந்து ஒரு கருவியை உருவாக்கினார்.அதை "நேப்பியர் போன்ஸ்" என்று அழைத்தனர்.இதன் மூலம் பெருக்கல்,வகுத்தல் போன்ற செயல்முறைகளை எளிதாக செய்ய முடிந்தது.இவர் தான் பிற்காலத்தில் லாகிர்தமின் தந்தை என்று அழைக்கப்பட்டார்.

கி.பி.1622-ல் வில்லியம் ஆல்ட்ரெட் என்பவர் "ஸ்லைட் ரூல் " என்ற கருவியை கண்டுபிடித்தார் .கால்குலேட்டர் கண்டுபிடிப்பதற்கு முன் இந்த கருவியதான் கணித பயன்பாட்டிற்கு பலர் பயன்படுத்தினர். பெருக்கல் குறியீட்டுக்கு முதன் முதலில் "x" -ஐ பயன்படுத்தியது இவர்தான்.
 

தொடரும்...
 

3 comments:

  1. அறிந்து கொண்டேன்... தொடர்கிறேன்...

    நன்றி...

    ReplyDelete
  2. Thanks for the great information. I used to refer IBC Tamil News Technology for Latest Tech News in Tamil

    ReplyDelete