Friday, October 24, 2008

ஒரே கணினியில் லினக்ஸ் மற்றும் விண்டோஸ்XP -யை நிறுவுவது எப்படி?






எனது கணினி 1 ஜி.பி ராம் மற்றும் 60 ஜி.பி. நிலைவட்டை கொண்டது. இதில் எவ்வாறு விண்டோஸ் XP யையும் லினக்சையும் நிறுவுவது என்று இப்போது பார்ப்போம்..
முதலில் விண்டோஸ்XP மென்பொருள் சி.டி யை வைத்து உங்கள் கணினியில் விண்டோஸ்XP -யை நிறுவிக்கொள்ளவும்
60 ஜி.பி. நிலைவட்டில் 10 ஜி.பி இடத்தை விண்டோஸ் XP-க்கு ஒதுக்கிவிட்டு மீதம் உள்ள இடத்தில் பிறகு லினக்சை நிறுவுவதற்காக பார்டிசியன் செய்யாமல் விட்டுவிட்டேன்.
விண்டோஸ் XP -யை முழுவதும் நிறுவியபிறகு உங்கள் கணினியை ரீபூட் செய்யவும்.
இப்போது பெடோரா லினக்ஸ் சி.டி-யை வைத்து அதே கணினியை பூட் செய்யவேண்டும்.
லினக்ஸ் நிறுவுவது எவ்வாறு என்று ஏற்கனவே பார்த்துள்ளோம்.
எனவே நிறுவலின் போது வரும் நிலைவட்டு பகிர்தல் திரைக்கு வருவோம்...இங்கு மீதம் உள்ள 50 ஜி.பி இடத்தில் /boot பார்டிசியன்-க்கு 100 எம்.பி,swap பார்டிசியன்-க்கு 2 ஜி.பி, / ரூட் பார்டிசியன்-க்கு 20 ஜி.பி மற்றும் /home பார்டிசியன்-க்கு 25 ஜி.பி என பார்டிசியன்-களை உருவாக்கியுள்ளேன்.


இப்போது பூட் லோடர் கான்பிகுரேசன் திரை வரும்.இதில்தான் சில முக்கியமான செயல்களை செய்யவேண்டும்.ஏனென்றால் விண்டோஸ் XP பூட் லோடரால் பெடோரா லினக்ஸ்-ஐ உணர முடியாது. ஆனால் பெடோரா லினக்ஸ் பூட் லோடரால் -ஆல் விண்டோஸ் XP -யை உணர முடியும்.எனவே GRUB boot loader will be installed on என்பதை தேர்வு செய்துவிட்டு கட்டத்தில் உள்ள fedor core என்பதை தேர்வு செய்யவேண்டும்.
Next அழுத்தி பிறகு வரும் திரைகளில் தேவையான தகவலை கொடுத்து லினக்ஸ் நிறுவலை முடிக்கவும்.
கணினி ரீபூட் ஆனவுடன் இப்போது நமக்கு தெரிவது பூட் லோடர் திரையாகும்.
இங்கு Fedora Core என்பதை தேர்வு செய்தால் பெடோரா லினக்ஸ் பூட் ஆகும்.
WinXp அல்லது Other என்பதை தேர்வு செய்தால் விண்டோஸ் பூட் ஆகும்.


No comments:

Post a Comment